2020ம் ஆண்டின் தொடங்கத்தில் இருந்தே திரையுலகில் பிரபலங்களின் மரணம் மற்றும் தற்கொலை தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதனால் ரசிகர்கள் பலருக்கும் இந்த ஆண்டு பெரும் வெறுப்பை கொடுத்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். கொரோனா பிரச்சனையால் பசி, பட்டினி என லட்சக்கணக்கான ஏழைகள் மக்கள் துன்பப்படுவது ஒருபுறம் என்றால், கோடிகளில் புரளும் நட்சத்திரங்கள் பலரும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்கின்றனர். 

 

இதையும் படிங்க: நடிகர் சூர்யா கொஞ்சி விளையாடிய குட்டி பாப்பாவா இது?... குட்டை உடையில் ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் கவர்ச்சி!

இந்தியில் பிரபல நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புட் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிலிருந்து மீள்வதற்குள் கன்னட திரையுலகில் காலடி எடுத்து வைத்த இளம் நடிகர் சுஷீல் கவுடா தற்கொலை செய்துகொண்டார். தனது முதல் படம் வெளியாகும் முன்னரே சுஷீல் தற்கொலை செய்து கொண்டது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் ஹாலிவுட் சினிமா மற்றும் சின்னத்திரையில் நடித்து வந்த நயா நிவேரா என்ற நடிகை தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இதையும் படிங்க: “த்ரிஷா மேல சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்”... மிரட்டல் விடுத்த மீரா மிதுனை வச்சி செய்யும் நெட்டிசன்கள்...!

நேற்று காலை தெற்கு கலிபோர்னியாவில் உள்ள பீரு ஏரியில் தனது 4 வயது மகனுடன் நயா படகு சவாரி சென்றுள்ளார். ஆனால் அவர் மீண்டும் கரை திரும்பாததால் சந்தேகமடைந்த படகுத்துறை நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அங்கு தனியாக இருந்த நயாவின் 4 வயது மகனை மட்டும் பத்திரமாக மீட்டுள்ளனர். 

 

இதையும் படிங்க: “நான் ஏதாவது பண்ணிக்கிட்டால்”.... நெட்டிசன்களுக்கு வனிதா விடுத்த அதிரடி எச்சரிக்கை...!.

அந்த சிறுவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அம்மா படகில் இருந்து தண்ணீரில் குதித்தார். ஆனால் மீண்டும் திரும்பவில்லை என பதிலளித்துள்ளார். நயாவிற்கு நீச்சல் தெரியும் என்பதாலும், இதுவரை அவர் கரை திரும்பாததாலும் ஒருவேளை அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகம் அடைந்துள்ளனர்.  நயாவின் உடலை மீட்கும் பணியில் 4 நவீன ரக ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர் உயிருடனும் மீட்கப்படலாம் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.