"போட்" நாயகனுக்கு பிறந்தநாள்.. "வாடா வா" பாடலை வெளியிட்டு வாழ்த்து சொல்லும் படக்குழு - Promo இதோ!
Yogi Babu : நாளை பிரபல நடிகர் யோகி பாபு தனது பிறந்தநாளை கொண்டாடவுள்ள நிலையில், அவர் நடித்து வரும் BOAT படத்தின் படக்குழு ஒரு பிரத்தியேக விடியோவை வெளியிடவுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் நாடகங்களில் அட்மாஸ்பியர் ஆர்டிஸ்டாக தனது பயணத்தை தொடங்கிய ஒரு நடிகர் தான் யோகி பாபு. 90s கிட்ஸ் பலருக்கும் மிகவும் விருப்பமான "லொள்ளு சபா" நிகழ்ச்சியின் மூலம் தான் யோகி பாபு தனது கலை பயணத்தை தொடங்கினார். கடந்த 1985ம் ஆண்டு ஆரணியில் பிறந்த பாபு, கடந்த 2009ம் ஆண்டு வெளியான "யோகி" என்கின்ற திரைப்படத்தின் மூலம் யோகி பாபுவானார்.
தொடர்ச்சியாக பல தமிழ் திரைப்படங்களில் இவர் நடித்து வந்த நிலையில், கடந்த 2013ம் ஆண்டு மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான "சூது கவ்வும்" திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பிரேக்கிங் பாய்ண்டாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. அதன் பிறகு இரண்டு வருடங்களுக்கு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒரு திரைப்படம் என்று நடித்து வந்தார் யோகி பாபு.
"ஈட்டி பட அதர்வா மாதிரி தான் நானு" மனம் திறந்த டான்சர் மனோஜ் ஜாக்சன் - எமோஷனலான அவர் மனைவி!
ஆனால் இப்போது வருடத்திற்கு 25க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல், அண்மையில் அவர் பாலிவுட் உலகிலும் களமிறங்கியது அனைவரும் அறிந்ததே. தெலுங்கு மற்றும் மலையாள மொழியிலும் அவர் நடிக்க துவங்கியுள்ளார். இந்நிலையில் பிரபல இயக்குனர் சிம்பு தேவன் இயக்கத்தில் உருவாகி வரும் "போட்" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்து வருகிறார்.
நாளை ஜூலை 22ம் தேதி யோகி பாபு தனது 38வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், பிரத்தியேகமாக அந்த திரைப்படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாக உள்ளது. இப்பொது அந்த பாடலுக்கான முன்னோட்டம் வெளியாகி உள்ளது. ஏற்கனவே இந்த 2024ம் ஆண்டில் யோகி பாபு நடிப்பில் 11 படங்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.