- Home
- Gallery
- "ஈட்டி பட அதர்வா மாதிரி தான் நானு" மனம் திறந்த டான்சர் மனோஜ் ஜாக்சன் - எமோஷனலான அவர் மனைவி!
"ஈட்டி பட அதர்வா மாதிரி தான் நானு" மனம் திறந்த டான்சர் மனோஜ் ஜாக்சன் - எமோஷனலான அவர் மனைவி!
Manoj Jackson : பிரபல டான்சர் மனோஜ் ஜாக்சன் தனக்கு சிறுவயது முதலிலேயே இருந்து வரும் ஒரு வினோதமான உடல் ரீதியான பிரச்சனை குறித்து மனம் திறந்துள்ளார்.

Dancer manoj
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒளிபரப்பான "உங்களில் யார் அடுத்த பிரபுதேவா" என்கின்ற நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடன கலைஞர் தான் மனோஜ் ஜாக்சன். இவருடைய அசாத்தியமான நடனம் பலரையும் கவர்ந்துள்ளது.
Dancer manoj jackson
"தென்னகத்தின் மைக்கேல் ஜாக்சன்" என்று அழைக்கப்படும் பிரபு தேவாவே, இவரை பல மேடைகளில் வியந்து பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பொது மனோஜ் தனியாக ஒரு டான்ஸ் ஸ்டுடியோ ஒன்றியம் நடத்தி வருகிறார்.
Deepika
இந்நிலையில் "ஈட்டி" திரைப்படத்தில் வரும் நடிகர் அதர்வாவை போல தன் உடலில் ஒரு சிறு காயம் ஏற்பட்டால் கூட, ரத்தம் உறையாமல் தொடர்ச்சியாக அது வெளியேறும் பிரச்சனை தனக்கு உள்ளதாக கூறியுள்ளார். இதனால் சிறுவயது முதலிலேயே, தன்னை மிகவும் கண்ணும் கருத்துமாக தனது பெற்றோர் பாதுகாத்து வருவதாகவும் கூறியுள்ளார் மனோஜ் ஜாக்சன்.
Manoj Marriage
இதை அனைத்தையும் என் மனைவி தீபிகாவிடம் கூறி தான் அவரை திருமணம் செய்தேன் என்றும், என்னை திருமணம் செய்து கொண்டதற்காக அவருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன் என்றும் மனோஜ் ஜாக்சன் கூறியிருக்கிறார்.
குடும்பத்தோடு இணைந்த ஆல்யா மானசா.. கணவர் கொடுத்த ஸ்வீட் ஷாக் - மகிழ்ச்சியில் அவர் வெளியிட்ட பிக்ஸ்!