முன்னணி நடிகர் ஒருவரின் மனைவிக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதியாகியுள்ளதாக, தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

உலக மக்களை ஆட்டிப்படைத்து விட்டு, தற்போது இந்தியாலும் தன்னுடைய கொடூர முகத்தை காட்டி வருகிறது கொரோனா வைரஸ். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இதன் தாக்கத்தை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் முழு மூச்சுடன் இறங்கியுள்ளது. 

ஊரடங்கு உத்தரவு, ஈபாஸ் இல்லை என்றால் வண்டிகள் பறிமுதல், வண்டிகளுக்கு கிருமி நாசினி தெளிப்பு, மக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் இருக்க கிருமி நாசினி சுரங்கம், மாஸ்க் அணிவது, கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும் என அறிவுறுத்துவது என பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.  ஆனால் இதையும் மீறி பலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவது மட்டும் இன்றி உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இந்நிலையில், கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தர்ஷன். இவருடைய மனைவி விஜயலஷ்மிக்கு கொரோனா தொற்று உறுதியாகியதாக தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பானது. இந்த செய்தி அறிந்த அவர், பதறி அடுத்து விளக்கம் கொடுத்துள்ளார். அதில் தான் வசித்து வரும் அடுக்கு மாடி குடியிருப்பில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது உண்மை. ஆனால் தனக்கு கொரோனா என்று வெளியான தகவலில் உண்மை இல்லை என்றும், குடும்பத்துடன் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளார். உறுதியான தகவல் இல்லாத போது, இது போன்ற தகவலை வெளியிட வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் கன்னட திரையுலகில் சிறு பரபரப்பு ஏற்பட்டு பின் ஓய்ந்தது.