- Home
- Cinema
- தொலைக்காட்சி
- கதையை முடிக்க சொன்ன ஆலிவர்... ஜனனிக்காக கழுகு போல் காத்திருக்கும் ரவுடிகள் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
கதையை முடிக்க சொன்ன ஆலிவர்... ஜனனிக்காக கழுகு போல் காத்திருக்கும் ரவுடிகள் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஆலிவர் தேவசகாயத்தின் ஆட்கள் துரத்தி வருவதால், அவர்களுக்கு பயந்து சக்தியும், ஜனனியும் ஒளிந்திருக்கிறார்கள். அதைப்பற்றி பார்க்கலாம்.

Ethirneechal Thodargiradhu Serial Today Episode
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனியும் சக்தியும் கொடைக்கானலில் ஜாலியாக சுற்றிக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு இன்ஸ்பெக்டர் பாண்டியனிடம் இருந்து ஒரு போன் கால் வருகிறது. அவர் அவர்களின் போனுக்கு ஒரு ஸ்கெட்ச் அனுப்பி இதுதான் ஆலிவரா என செக் பண்ணி சொல்லுமாறு கூறுகிறார். அந்த போட்டோவை பார்த்ததும் பதறிப் போன ஜனனி, இவன் தான் சார் ஆலிவர் என சொல்ல, மறுபுறம் சக்தியும், இவன் தாங்கள் தங்கி இருந்த ரூமுக்கு அருகில் இருந்ததாக கூறுகிறார். இதனால் அவர்களை பத்திரமாக இருக்க சொல்கிறார் பாண்டியன். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.
எஸ்கேப் ஆகும் ஜனனி - சக்தி
ஜனனியும், சக்தியும் பாண்டியன் சொன்ன இடத்துக்கு காரில் சென்றுகொண்டிருக்க, அப்போது ஆலிவரின் ஆட்கள் அவர்களை சுத்துப் போடுகிறார்கள். அவர்களிடம் இருந்து எஸ்கேப் ஆகி காரில் சக்தியும், ஜனனியும் செல்ல, அவர்களை ஆலிவரின் ஆட்கள் வெறிகொண்டு துரத்தி வருகிறார்கள். ஒரு கட்டத்தில், அவர்களிடம் இருந்து தப்பித்து ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் ஒளிந்துகொள்கிறார்கள். அப்போது சக்தியிடம் பேசும் ஜனனி, தயவு செஞ்சு நம்ம ஊருக்கே போயிடலாம் என கூறுகிறார். ஏனெனில் அந்த ஆலிவர் கொடூரமானவன், அவனிடம் சிக்கினால் அவ்வளவுதான் என எச்சரிக்கிறார்.
கொல்ல காத்திருக்கும் ரெளடிகள்
அதற்கு சக்தி, இப்போதைக்கு அவசரப்பட வேண்டாம் நாம் கொஞ்ச நேரம் காத்திருந்து செல்லலாம். இப்போ நாம் போனால், அவர்கள் செல்லும் வழியில் காத்திருப்பார்கள். அவர்களிடம் சிக்கும் நிலை ஏற்படும். அதனால் வெயிட் பண்ணி போகலாம் என சொல்கிறார். மறுபுறம் ரெளடிகளிடம் போன் பேசும் ஆலிவர், ஜனனி விடிஞ்சதும் போலீஸுக்கு போகலாம்னு பிளான் பண்ணூவா அங்க வச்சு அவளை முடிச்சிருங்கடா என உத்தரவு போடுகிறார். இதனால் ரெளடிகளும் இரவு முழுக்க ஜனனிக்காக வெறிகொண்டு காத்திருக்கிறார்கள். அவர்களிடம் சிக்காமல் ஜனனி தப்பித்தாரா என்பது சஸ்பென்ஸாக உள்ளது.
ஈஸ்வரிக்காக நடக்கும் டிராமா
மறுபுறம் வீட்டில், ஆதி குணசேகரன் தன் வீட்டில் அம்மாவிடம் அழுது டிராமா போட்டதை அடுத்து, அவர்கள் தன் மீதுள்ள கேஸை வாபஸ் வாங்குவார்கள் என்கிற நினைப்பில் காத்திருக்கிறார். ஆனால் வீட்டில் உள்ள பெண்களோ, ஈஸ்வரி குணமாகப் போகும் விஷயம் வீட்டில் உள்ள ஆண்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என முடிவெடுத்து, அவருக்கு உடல்நிலை மோசமடைந்து வருவதாக கூறி, ஒவ்வொருவராக ஹாஸ்பிடலுக்கு படையெடுத்து வருகிறார்கள். நாளை ஈஸ்வரி டிஸ்சார்ஜ் ஆக உள்ளதாக டாக்டர் சொல்லி இருக்கிறார். ஈஸ்வரியின் வருகை கதையில் என்னென்ன மாற்றத்தை கொண்டுவரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

