MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • துரத்தும் ஆலிவர் ஆட்கள்... உயிர் பயத்தில் ஜனனி; ஈஸ்வரி பற்றி வந்த குட் நியூஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

துரத்தும் ஆலிவர் ஆட்கள்... உயிர் பயத்தில் ஜனனி; ஈஸ்வரி பற்றி வந்த குட் நியூஸ் - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனிக்கு ஆலிவர் தன்னை சேஸ் பண்ணி வரும் விஷயம் தெரிந்ததும் அவர் சக்தி உடன் காரில் தப்பிச் செல்கிறார். இதையடுத்து என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Mar 20 2026, 10:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Ethirneechal Thodargiradhu Serial Today Episode
Image Credit : youtube/suntv

Ethirneechal Thodargiradhu Serial Today Episode

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் ஜனனி, சக்தி இருவரும் கொடைக்கானல் சென்றிருந்த கேப்பில் வீட்டில் ஒரு பூஜை நடத்திய ஆதி குணசேகரன், அடுத்த வேலையாக தன்னுடைய தம்பிகளை அனுப்பி, அம்மாவிடம் சமாதானம் பேச தொடங்கி இருக்கிறார். இதையடுத்து கதிர் தன் அம்மா விசாலாட்சியிடம் சென்று, தன் அண்ணன் மீது போட்டுள்ள கேஸை வாபஸ் வாங்குமாறு கெஞ்சினார். இதையடுத்து அவரை ரூமுக்குள் தனியாக அழைத்து சென்று பேசிய குணசேகரன், அவரிடம் செண்டிமெண்டாக பேசி லாக் பண்ணுகிறார். இதையடுத்து இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

25
ஈஸ்வரி கம்பேக்
Image Credit : youtube/suntv

ஈஸ்வரி கம்பேக்

குணசேகரனிடம் பேசிவிட்டு கீழே வந்த விசாலாட்சி, கிச்சனுக்குள் சென்றதும் எதுவும் பேசாமல் சைலண்டாகவே நின்றுகொண்டிருக்க, அப்போது அவரிடம் உங்க மகன் என்ன சொன்னாரு என ரேணுகா கேட்கிறார். அதற்கு வாய்திறக்காமல் அமைதியாக நிற்கிறார் விசாலாட்சி, உங்க புள்ள எதுவும் மிரட்டுனாரா என கேட்க, அந்த நேரம் பார்த்து தர்ஷன் ஒரு குட் நியூஸ் உடன் வீட்டுக்கு வருகிறார். இன்னும் 48 மணிநேரத்துல அம்மா கண் முழிச்சிடுவாங்கனு டாக்டர் சொன்னதாக தர்ஷன் சொல்ல, அதைக்கேட்டு அனைவரும் மகிழ்ச்சி அடைகிறார். குறிப்பாக விசாலாட்சி செம ஹாப்பியாக உள்ளார்.

Related Articles

Related image1
ஜனனி - சக்தியை ஜோடியாக சிறைபிடித்தாரா தேவசகாயம்? எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Related image2
விசாலாட்சியை பிரைன் வாஷ் பண்ணும் குணசேகரன்; தேவசகாயத்திற்கு தெரியவரும் உண்மை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
35
ஆலிவரின் அடையாளத்தை காட்டிய ஜனனி
Image Credit : youtube/suntv

ஆலிவரின் அடையாளத்தை காட்டிய ஜனனி

மறுபுறம் கொடைக்கானலில் உள்ள ஆலிவர் தேவசகாயத்துக்கு சக்தி தான் ஜனனியின் கணவர் என்கிற உண்மை தெரியவருகிறது. அவர்கள் ரூமுக்கு வந்ததும் அவர்களை ஒருவழி பண்ணுகிறேன் என காத்திருக்கிறார். வெளியே காரில் சென்றுகொண்டிருந்த ஜனனி மற்றும் சக்திக்கு ஒரு மெசேஜ் வருகிறார். இன்ஸ்பெக்டர் பாண்டியன் அனுப்பிய அந்த மெசேஜில், தேவசகாயம் தோற்றம் பற்றிய ஒரு ஸ்கெட்ச் இருக்கிறது. இதைப்பார்த்த ஜனனி, இவன் தான் தேவசகாயம் என்பதை கன்பார்ம் பண்ணுகிறார். பின்னர் சக்தி, நானும் இவனை பார்த்திருக்கிறேன் என ஒரு குண்டை தூக்கிப் போடுகிறார்.

45
பதறும் ஜனனி
Image Credit : youtube/suntv

பதறும் ஜனனி

நாம தங்கியிருந்த ரூமுக்கு அருகில் தான் இவன் இருந்தான் என்பதை போலீஸிடம் கூறுகிறார் சக்தி. இதைக்கேட்டு ஷாக் ஆன ஜனனி, உடனே இங்கிருந்து கிளம்பிடலாம் என கூறுகிறார். அப்போது தான் ஆலிவரின் ஆட்கள் தங்களை ஃபாலோ பண்ணும் விஷயம் ஜனனிக்கு தெரியவருகிறது. அது தெரிந்ததும் அவர் பதறிப்போக, அவரை ஆசுவாசப்படுத்தும் சக்தி, ஒன்னும் இல்ல, இங்க இருந்து பாண்டியன் சார் சொன்ன இடம் வெறும் 10 நிமிஷம் தான், நம்ம அங்க போவோம் என கூறிவிட்டு காரில் கிளம்புகிறார் சக்தி. அந்த நேரம் பார்த்து அவர்கள் எதிரே ஒரு கார் வந்து வழிமறுத்து நிற்கிறது.

55
சேஸ் பண்ணும் ஆலிவர் ஆட்கள்
Image Credit : youtube/suntv

சேஸ் பண்ணும் ஆலிவர் ஆட்கள்

அதில் இருந்து சில ரெளடிகள் இறங்கி வருவதை பார்த்த சக்தி, இது ஆலிவரின் ஆட்கள் தான் என தெரிந்ததும், வேகமாக காரை ரிவர்ஸ் எடுத்து கிளம்புகிறார். அவர்கள் சக்தியின் காரை சேஸ் பண்ணி வருகிறார்கள். அப்போது ஆலிவருக்கு போன் போட்டு பேசும் டேவிட், தாங்கள் அவர்களை கண்டுபிடுத்துவிட்டதாகவும், அவர்களை சேஸ் பண்ணி சென்று கொண்டிருப்பதகாவும் சொல்ல, அவங்களை எப்படியாவது பிடிச்சிருங்க, அவங்க இந்த மலையைவிட்டு தரையிரங்க கூடாது என ஒரு ஆர்டர் போடுகிறார். இதையடுத்து என்ன ஆனது? ஜனனியும் சக்தியும் தப்பித்தார்களா என்பதை இனி வரும் எபிசோடில் பார்க்கலாம்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
எதிர் நீச்சல் தொடர்கிறது.
Latest Videos
Recommended Stories
Recommended image1
மனோஜ் காலில் விழுந்து கெஞ்சிய ரோகிணி... டைவர்ஸ் கேஸில் புது ட்விஸ்ட் - சிறகடிக்க ஆசை அப்டேட்
Recommended image2
ஷாக்கிங் நியூஸ்! கணவருக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய முன்னணி சீரியல் நடிகை! ரசிகர்கள் அதிர்ச்சி!
Recommended image3
விவாகரத்து நோட்டீஸ் எதற்கு? சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு செக் வைக்கும் காதலன்
Related Stories
Recommended image1
ஜனனி - சக்தியை ஜோடியாக சிறைபிடித்தாரா தேவசகாயம்? எதிர்பாரா ட்விஸ்ட் உடன் எதிர்நீச்சல் தொடர்கிறது
Recommended image2
விசாலாட்சியை பிரைன் வாஷ் பண்ணும் குணசேகரன்; தேவசகாயத்திற்கு தெரியவரும் உண்மை - எதிர்நீச்சல் தொடர்கிறது அப்டேட்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved