தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு, ஆயிரம் எண்ணிக்கையை கடந்துள்ளது. ராயபுரம் மண்டலத்தில் ஆயிரத்து 981 பேருக்கும், கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 460 பேருக்கும், திரு.வி.க.நகரில் ஆயிரத்து188 பேருக்கும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து118 பேருக்கும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 44 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னை வடபழனி தனியார் மருத்துவமனையில் சூளைமேட்டைச் சேர்ந்த 86 வயது முதியவர் உயிரிழந்தார். கே.எம்.சி.யில் வுருகம்பாக்கத்தைச் சேர்ந்த 54 வயது முதியவரும், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த 65 முதியவரும் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை சென்னைவாசிகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. 

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக ரசிகர்களை மிரள வைக்க போகும் நயன்தாரா...!

அதேபோல் பெரு நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இரு தினங்களுக்கு முன்பு ஒரகடத்தில் உள்ள நோக்கியா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தில் 18 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் மேலும் 6 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்படி நோக்கியா நிறுவனம் மூடப்பட்டது. இன்று சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் மீண்டும் செயல்பட தொடங்கிய ஹூண்டாய் கார் நிறுவனத்தில் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இதையும் படிங்க: இந்த குட்டி பாப்பா இரண்டு பேரும் யாருன்னு தெரியுதா?... இவங்க தான் இப்ப சிவகார்த்திகேயன் பட ஹீரோயின்கள்...!

தொழிற்சாலை, குடியிருப்பு பகுதிகளை மட்டும் அச்சுறுத்தி வந்த கொரோனா தற்போது ஆதரவற்றோர் இல்லங்களையும் விட்டுவைக்கவில்லை. சென்னையில் பிரபல நடிகர் நடத்தி வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பணிப்பெண்கள் இருவர் உட்பட 20 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து பாதிப்பு இல்லாதவர்களை வேறு இடத்தில் தங்க வைக்கும் பணியில் சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.