இந்தியாவில் வேகமெடுத்து வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நான்காம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு கட்டுபாடுகளுடன் அனுமதி அளிக்கப்பட்டுள்ள போது. ஆனால் சினிமாத்துறையை பொறுத்தவரை போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரங்குகளுக்குள் நடைபெறும் சீரியல் ஷூட்டிங்கிற்கு மட்டும் கடந்த வாரம் அனுமதி அளிக்கப்பட்டது. 

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் வீட்டிற்குள் முடங்கியுள்ள பிரபலங்கள் பலரும் தங்களது மறக்கமுடியாத நினைவுகளை சோசியல் மீடியாவில் ஷேர் செய்து வருகின்றனர். ஒருபுறம் ரசிகர்களும் தங்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகளின் சின்ன வயசு புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து லைக்குகளை குவிக்கின்றனர். அப்படி தற்போது டாப் ஹீரோயின்களாக இருக்கும் இரண்டு குட்டி பாப்பாவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக ரசிகர்களை மிரள வைக்க போகும் நயன்தாரா...!

மேலே உள்ள போட்டோவில் இருக்கும் இரண்டு குழந்தைகளும் தற்போது தமிழ் சினிமாவின்  முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார்கள். யார்னு தெரியுதா.? அவர்கள் வேறு யாரும் இல்லை. பிரபல நடிகைகள் கீர்த்தி சுரேஷ் மற்றும் கல்யாணி பிரியதர்சன் தான் அது. சிவகார்த்திகேயனுடன் ரஜினி முருகன், ரெமோ போன்ற படங்களில் நடித்து, தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ்.தற்போது சூப்பர் ஸ்டாருக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க: “பிகில்” இந்திரஜாவிடம் அத்துமீறிய ரசிகர்... நெத்தியடி பதிலால் தெறித்து ஓட்டம்...!

அதேபோல் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான ஹீரோ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் கல்யாணி பிரியதர்ஷன், அவர் தான் அந்த மற்றொரு குழந்தை. கேரளாவை பூர்வீகமாக கொண்ட இந்த இரண்டு ஹீரோயின்களும் சிறு வயது முதலே நெருங்கிய தோழிகளாம். இந்த உண்மை தெரிந்த பிறகு நடிகைகள் தற்போது எடுத்துக்கொண்ட போட்டோவுடன் சேர்ந்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.