அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான "பிகில்" படத்தில் பாண்டியம்மாவாக நடித்தவர் ரோபோ சங்கர் மகள் இந்திரஜா. முதல் படத்திலேயே தனது நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். படப்பிடிப்பு தளத்தில் துறு,துறுவென சுற்றி வந்த இந்திரஜாவின்  டிக்-டாக் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம். அந்த படத்தில் விஜய் அவரை குண்டம்மா... குண்டம்மா... என அழைத்து வெறியேத்தும் சீன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அந்த ஒரே சீனில் ஒட்டுமொத்த ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்துவிட்டார் பாண்டியம்மாள்.... இல்லை, இல்லை இந்திரஜா. 

பிகில் படத்தில் நடிப்பதற்கு முன்பே இருந்தே இந்திரஜா டிக்-டாக்கில் செம்ம பிரபலம். சாய்பல்லவியின் பிரேமம் டான்ஸை வைத்து இந்திரஜா செய்த டிக்-டாக் சோசியல் மீடியாவில் வைரலானது. அதேபோல் அப்பா, அம்மா, தங்கையுடன் சேர்ந்தும் விதவிதமான டிக்-டாக் வீடியோக்களை செய்து அசத்தியுள்ளார். சமீபத்தில் கூட இந்திரஜா தனது அப்பா ரோபோ சங்கர் உடன் சேர்ந்து வாத்தி கம்மிங் பாட்டிற்கு போட்ட சூப்பர் டான்ஸ் செம்ம வைரலானது. 

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

நட்சத்திர தம்பதியின் மகள் என்பதையும் தாண்டி, பிகில் படத்தின் மூலம் கிடைத்த புகழால் சோசியல் மீடியாவில் இந்திரஜாவிற்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் கலந்துரையாடிய இந்திரஜாவை ரசிகர் ஒருவர் ஏடாகூடமாக கேள்வி கேட்டுள்ளார். இதை வேறு யாராவது டாப் ஹீரோயின்களிடம் கேட்டிருந்தால் கூட அவர்கள் அந்த நபரை கண்டபடி கழுவி ஊத்தி இருப்பார்கள். ஆனால் வயதில் இளையவராக இருந்தாலும் இந்திரஜா சொன்ன நறுக் பதில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதையும் படிங்க: காதலர் விக்னேஷ் சிவனுக்காக ரசிகர்களை மிரள வைக்க போகும் நயன்தாரா...!

அதாவது இந்திரஜாவிடம் அந்த நபர், “உங்களை உங்க அப்பாவோட லவ்வராக நடிக்கச் சொன்னால் நடிப்பீர்களா?” என்று அநாகரீகமாக இல்லாமல் படுகேவலமாக கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு கூலாக பதில் கொடுத்துள்ள இந்திரஜா, “நல்ல கேள்வி நிலைமை அப்படி என்றால் நடிப்பேன். ஆம்... நான் என் அப்பாவை காதலிக்கிறேன். அவ்வளவு தான் ப்ரோ” என துளிகூட கோவமே இல்லாமல் பதிலடி கொடுத்துள்ளார்.