பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரும் நல்ல உடல் நலத்துடன் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில்   இதையடுத்து எம்.பி ஜெயா பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கு முதலில் நடத்தப்பட்ட சோதனைகளில் தொற்று இல்லை எனக்கூறப்பட்டது. 

 

இதையும் படிங்க: அமிதாப் பச்சன் குடும்பத்தை சுற்றி வளைத்த கொரோனா... மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆராத்யாவிற்கும் தொற்று உறுதி

ஆனால் இந்நிலையில் இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட antigen பரிசோதனையில் ஐஸ்வர்யா ராய், அவருடைய மகளான ஆராத்யா ஆகியோருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தி ஐஸ்வர்யா ராய் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  இதையடுத்து பலரும் அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நல்ல உடல் நலத்துடன் வீடு திரும்ப வேண்டுமென பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

 

இதையும் படிங்க: 14 வயதிலேயே தன்னை அறியாமல் தாறுமாறாக உருவெடுக்கும் அனிகா... கேரள உடையில் நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இதனிடையே பாலிவுட்டில் பிரபல நடிகரான அனுபம் கேரின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அனுபம் கேர் அவருடைய ட்விட்டர் பக்கத்தில், எனது தாயாருக்கு லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோகிலா பென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் தனது சகோதரர், உறவினருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள அவர், தனக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இல்லை என முடிவு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.