famous actor interview about super stars upcoming movie

சூப்பர் ஸ்டார் ரசிகர்களிடையே மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் காலா. ரஞ்சித் இயக்கத்தில், தனுஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம், ரஜினியின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு நல்ல தொடக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் நடைபெற்ற காலா இசை வெளியீட்டு விழா அதற்கு ஒரு சான்று.பொதுவாகவே ரஜினி படம் என்றாலே அதற்கான வரவேற்பே தனி தான்.

அதிலும் காலா படம் பற்றி, ரஜினி மற்றும் ரஞ்சித் போன்றோர் கொடுத்திருக்கும் பேட்டிகள் , காலா படம் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

அந்த ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தும்வகையில் தனுஷ் ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அதில் காலா படம் பார்த்துவிட்டேன். கண்டிப்பாக இந்தப்படம் ரஜினி ரசிகர்களுக்கு ஒரு நல்ல ட்ரீட்டாக அமையும்.

சூப்பர் ஸ்டார் லோக்கலாக இறங்கி நடித்து ரொம்ப நாளாச்சு. அப்படி ஒரு சூப்பர் ஸ்டாரை மறுபடியும் காலா படத்தில் நீங்கள் பார்க்கப் போகிறீர்கள். ஒரு நடிகராக பல காட்சிகளில் ரஜினி அசத்தியிருக்கிறார்.

ஒரு சில காட்சிகளில் அரங்கம் தொடர்ந்து கைதட்டல்களால் அதிரும் என்பது உறுதி. காலா ரிலீசுக்காக நானும் காத்திருக்கிறேன். என அந்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் தனுஷ்.