இந்த 2020 ஆம் ஆண்டை நம்மால் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. காரணம் பல திறமையான கலைஞர்களை இழந்துள்ளோம். பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அணைத்து திரையுலக ரசிகர்களும் தங்கள் மனம் கவர்ந்த சில பிரபலங்களை இழந்துள்ளனர். கொரோனா பீதி ஒரு பக்கம் என்றால், அடுத்தடுத்து மரணிக்கும் பிரபலங்களின் செய்தி திரையுலகினர் இடையே அதிர்ச்சியை அதிகரித்து வருகிறது. 

 

இதையும் படிங்க: Rare Photos: ஷூட்டிங் ஸ்பாட்டில் அசின் அடித்த லூட்டி... வாய்பிளக்கும் விஜய், அஜித், சூர்யா....!

கொரோனா தொற்றால் பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உயிரிழந்த சோகத்தில் இருந்தே திரையுலகினரும், ரசிகர்களும் மீளாத நிலையில், தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஜீவிதாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போது இருவரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ராஜேசகர் விரைவில் நலம் பெறுவார் என்றும், அவர் நல்லபடியாக இருப்பதாகவும் அவருடைய மகள் தெரிவித்துள்ளார். 

 

இதையும் படிங்க: இடை தெரிய உடை அணிந்த அனிகா... கடுப்பான ரசிகர்களால் கண்டபடி குவியும் கமெண்ட்ஸ்...!

இந்நிலையில் கொரோனா தொற்றால் அடுத்தடுத்து திரைப்பிரபலங்கள் இறப்பது மிகப்பெரிய சோகத்தை உருவாக்கி வருகிறது. இந்நிலையில் குஜராத்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நரேஷ் கனோடியா என்பவர் கொரோனாவால் உயிரிழந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தொடர் சிகிச்சையில் இருந்த நரேஷ் கனோடியா இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாஜகவில் தீவிரமாக இயங்கி வந்த இவருடைய மரணம் அக்கட்சியினரையும், ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.