கள்ளநோட்டு அச்சிட்டு பிரபல நடிகை...! பொடி வைத்து பிடித்த  போலிஸ்..வெளிவந்த மேலும் அதிர்ச்சியூட்டும்  தகவல்...!

கேரளாவில் கள்ளநோட்டுகளின் புழக்கம் அதிகமாக உள்ளது என  பல்வேறு தரப்பினர் பல முறை புகார் தெரிவித்த வண்ணம் இருந்துள்ளனர்.

இதனால் மோப்பம் பிடிக்க ஆரம்பித்த போலீசார் இதற்கு பின் பெரிய கும்பல் செயல்படுகிறதே என புரிந்துக்கொண்டனர்.

பின்னர் ஒரு கட்டத்தில் இதற்கெல்லாம் மூலக்காரணம் மலையாள சீரியல் நடிகை தான் என கண்டறியப்பட்ட செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

இடுக்கி மாவட்டம் அணைக்கரை பகுதியில் வாகன சோதனையில்   போலீசார் ஈடுபட்டிருந்த போது, காரில் பயணம் செய்த மூவரை  போலீசார் குறுக்கு விசாரணை செய்தனர்.

அவர்காளிடமிருந்து, இரண்டரை லட்சம் ரூபாய் பறிமுதல் செய்தனர்.  இதனை சோதித்து பார்த்ததில் அவை அனைத்தும் கள்ள நோட்டுக்கள் என தெரிய வந்தது.

இவர்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், கள்ளநோட்டு அடிப்பதில் மிக முக்கியமாக செயல்பட்டு வருபவர் மலையாள சீரியல் நடிகை சூர்யா  என தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து போலீசார், நடிகை வசித்து வரும் பங்களாவை சுற்றி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

அப்போது  சந்தேகப்படும்படியான பல நபர்கள் அந்த வீட்டிற்கு அடிக்கடி வருவும் செல்வதுமாக இருந்துள்ளனர். இதை பார்த்த போலீசார் பங்களாவை சுற்றி வளைத்து, சோதனை செய்தனர்.

பின்னர் கள்ள நோட்டு அடிக்க மிக முக்கியமாக இருந்த நடிகை சூர்யா  மற்றும் அவரது தாய் ரமாதேவி, தங்கை சுருதி, ஆகியோரை கைது  செய்தனர்

அவருடைய வீட்டில், கள்ளநோட்டு அடிக்க பயன்படுத்தப்பட்ட  சாதனங்கள், ரூ . 57 லட்சம் மதிப்பிலான ரொக்க பணம் கைப்பற்றப்பட்டது.

இதில் என்ன டீல் தெரியுமா ...?

ஒரு லட்சம் நல்ல நோட்டு கொடுத்தால் இவர்கள் மூன்று லட்சம் நல்ல   நோட்டுகள் தருவாங்களாம்.