facebook relationship leads to sexual arrasment
சமூக வலைதளங்களில் நண்பர்களாக பழகுவது எந்த அளவிற்கு ஆபத்து என்பதை இந்த சம்பவம் உணர்த்தும்..
எதற்கும் எல்லை உண்டு என்பதை நினைவில் வைக்காதவர்கள் செய்யும் பல தவறான செயல்கள் தான் வாழ்கையே பாதாள சாக்கடைக்குள் தள்ளி விடுகிறது என்று சொல்ல முடியும் அல்லவா...? அப்படி பட்ட சம்பவத்தை தான் தற்போது நாம் பார்க்க இருக்கிறோம்...
சென்னையில் உள்ள பெரியமேடு பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை,பேஸ்புக் நண்பர் ஒருவர் கடந்த 4 வருடங்களாக
தனது கட்டுப்பாட்டில் வைத்து பாலியல் பலாத்காராம் செய்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
நடந்தது என்ன ?
பேஸ்புக் மூலம் இந்த சிறுமி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் மோனி என்பவருடன் நண்பராக அறிமுக மாகி உள்ளார்
நாளடைவில் ஒரு நாள் நேரில் சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். அப்போது இருவரும் பேசிக்கொண்ட சில விஷியங்கள் மற்றும் கொஞ்சம் நெருங்கி பழகியதாக தெரிகிறது.
இதனை மோனி அந்த சிறுமிக்கு தெரியாமலேயே வீடியோ எடுத்து. அதனை காரணம் காட்தி பலமுறை அந்த பெண்ணை பாலியல் பாலாத்காரம் செய்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளாக இதே போன்று கொடுமை அனுபவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில்,கடந்த 2016 ஆம் ஆண்டு ரவீந்தர் என்பவரை அறிமுகப்படுத்தி அவருடனும் உறவு கொள்ளுமாறு அந்தச் சிறுமியை வற்புறுத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து ரவீந்தரும் அந்தச் சிறுமியைப் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனிடையே, அந்தச் சிறுமி கர்ப்பமாகியதால் அவர்கள் இருவரிடமும் தெரிவித்துள்ளார்.பின்னர்,கருவைக் கலைக்க 5 லட்சம் கொண்டுவரும்படி கூறியுள்ளனர்.இதற்கு முன்னதாக இந்த சிறுமி வசதி படைத்தவர் என்பதால், அவரிடம் பல முறை லட்ச கணக்கில் பணத்தை வாங்கி உள்ளனர்.ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் பெற்றோரிடம் இதை சொல்லவே தற்போது காவல் நிலையத்தை நாடி,குழந்தை பாதுகாப்பு பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துகைது செய்துள்ளனர்.
ஆனாலும் இதனால் அந்த சிறுமி அனுபவித்து வந்த உடல் ரீதியான வலியும் மன ரீதியான நிம்மதியும் இல்லாமல் இத்தனை ஆண்டு காலம் இப்பெண் அனுபவித்து வந்த கொடுமைக்கு முற்றுப்புள்ளி கிடைத்தாலும், இதிலிருந்து மீண்டு வருவதற்கு எத்தனை ஆண்டு காலம் ஆகும் என்பதை நினைத்து பார்க்க வேண்டும்....இந்த சமூதாயத்தில் இனி வரும் காலங்களில் அப்பெண் எப்படியெல்லாம் போராட வேண்டி இருக்கும் என்பதை நம் மனதில் நினைத்தாலே சற்று கடினமாக உள்ளது அல்லவா....
இந்த நிலைமை நம் வீட்டு குழந்தைகளுக்கும் வராமல் இருக்க ஒரு கண் வைத்து பார்த்துக்கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையே....
