Europe channel create rumor sharukhan death
பாலிவுட் சினிமாவில் எந்த நேரமும் மிகவும் பிஸியாக நடித்துக்கொண்டிருப்பவர்களில் ஒருவர் நடிகர் ஷாருகான்.
இந்நிலையில் இவர் ஒரு படத்தின் படப்பிடிப்பிற்காக, அவருடைய உதவியாளர்களுடன் பாரிஸுக்கு ஜெட் விமானத்தில் சென்றபோது, மோசமான வெட்பநிலை காரணமாக விமானம் சிதறி வெடித்ததாகவும் இதில் ஷாருகான் உட்பட 7 பேர் உடல் சிதறி உயிர் இழந்ததாக ஐரோப்பிய டிவி சேனல் ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தகவலை அறிந்த, நடிகர் ஷாருகான் தான் நலமுடன் மும்பையில் இருப்பதாக தன்னுடைய ரசிகர்களுக்கு ட்விட்டர் மூலம் தெரிவித்தார்.
மேலும், இந்த வாரத்தை தன்னால் மறக்கவே முடியாது, காரணம் விமான விபத்து புரளி மற்றும் சினிமா கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து என தன்னைக்கு பல அதிர்ச்சிகளை கொடுத்துள்ளது இந்த வாரம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு இவர் நடித்து வரும் புதிய படத்திற்கு அமைக்கப்பட்டிருந்த செட் திடீர் என கீழே இடிந்து விழுந்த விபத்தில் ஷாருகான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
