கொரோனா பிரச்சனைக்கு பின், நேற்று மிகவும் பிரமாண்டமாக ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு நடந்து முடித்த நிலையில், தற்போது 'ஈஸ்வரன்' படத்தில் இடம்பெற்றுள்ள டைட்டில் சாங் வெளியிடப்பட்டுள்ளது.

சிம்புவின் 46வது படமான ஈஸ்வரன் பொங்கல் விருந்தாக ஜனவரி 14ம் தேதி வெளியாக உள்ளது. முழுக்க கிராமத்து இளைஞனாகவே மாறியுள்ள சிம்புவைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். சுசீந்திரன் இயக்கியுள்ள இந்த படத்திற்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து செம்ம ஸ்லிம் லுக்கிற்கு மாறி நடித்துள்ளார்.

கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய இப்படத்தின் ஷூட்டிங் ஒரே கட்டமாக நடத்தி 25 நாட்களில் முடிக்கப்பட்டது. தற்போது படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் அனைத்தும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. இதில்  பாரதிராஜா, நந்திதா, முனீஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், யோகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏற்கனவே இசையமைப்பாளர் தமன் இசையில் ஈஸ்வரன் படத்தில் இருந்து தமிழன் பாட்டு பாடல் வெளியாகி தாறுமாறு வைரலான நிலையில், சற்று முன்னர் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள டைட்டில் பாடலான 'ஈஸ்வரன் வந்துட்டான்' பாடல் வெளியாகியுள்ளது. 

இந்த பாடலின் லிரிகள் வீடியோ இதோ...