Asianet News TamilAsianet News Tamil

'என்ஜாய் எஞ்சாமி' பாடல் பிரபலம் மரணம்..!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி' பாடலில் பாடி இருந்த பாக்கியம்மா என்கிற பாடகி காலமாகி விட்டதாக அறிவு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.
 

enjoy enjami singer bakiyamma death
Author
Chennai, First Published Jul 2, 2021, 4:51 PM IST

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி' பாடலில் பாடி இருந்த பாக்கியம்மா என்கிற பாடகி காலமாகி விட்டதாக அறிவு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: ரம்யா பாண்டியன் உதட்டை கடித்து... மூக்கை கடித்து முத்தம் கொடுத்து கொஞ்சல்ஸ்! வைரல் வீடியோ..!
 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோரின் கூட்டணியில் ‘இண்டிபென்டெண்ட் ஆல்பம்’ என்ஜாய் எஞ்சாமி பாடல் வெளியானது. இப்பாடல் யூ-ட்யூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே உலக அளவில் மிகப்பெரிய ஹிட் அடித்தது. இதை தொடர்ந்து இந்த பாடல் வேறு லெவல் சாதனை செய்துள்ளது. 

enjoy enjami singer bakiyamma death

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏ.ஆர்.ரஹ்மான் உருவாக்கியுள்ள மாஜா தளத்தின் தயாரிப்பில் இப்பாடல் உருவாகி இருந்தது . நிலத்தை இழந்த பூர்வக்குடிகளை மையப்படுத்தியதாக இந்த என்ஜாய் எஞ்சாமி பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வரிகளிலும், பழங்குடி மக்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும், இப்போது நாம் நாகரீகத்தால் தொலைத்த பல்வேறு விஷயங்களை இந்த பாடல் நினைவு கூர்ந்தது.

மேலும் செய்திகள்: கொரோனா நேரத்திலும் குதூகலாம்... குட்டை டவுசருடன் வலம் வரும் ராஷ்மிகா மந்தனா... வைரல் கிளிக்ஸ்!
 

enjoy enjami singer bakiyamma death

இந்த பாடலின் இடம்பெற்ற நாட்டுப்புற பாடகியான பாக்கியம்மா என்பவர் இறந்து விட்டதாக, பாடகர் அறிவு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். இதில்... "இழந்த பல உயிர்களுக்காக நீங்கள் உங்கள் இதயத்தில் இருந்து பாடியுள்ளீர்கள். உங்கள் திடீர் இழப்பு வேதனையை அளிக்கிறது. கலைஞர்கள் இறக்கக்கூடும், ஆனால் அவர்களது கலை எப்போதும் நம் இதயத்தில் நிலைத்திருக்கும். நீங்கள் எங்களுக்கு அத்தகைய உத்வேகம் கொடுத்துளீர்கள்என கூறியுள்ளார். மேலும் பலர் பாக்கியம்மாவிற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arivu (@therukural)

 

Follow Us:
Download App:
  • android
  • ios