மாநகரம், கைதி என வித்தியாசமான கதையில் புகுந்து விளையாடிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் டாப் ஹீரோக்களான விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே வெளியாகி இருக்க வேண்டிய மாஸ்டர் திரைப்படம் பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது. 

தியேட்டர்களில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ள போதும், சிறப்பு காட்சிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதால் அதிகாலை 4 மணி முதலே தளபதி ரசிகர்களின் கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டது. சென்னை மட்டுமின்றி சேலம், நெல்லை, கோவை உள்ளிட்ட நகரங்களிலும் நேற்று நள்ளிரவு முதலே ரசிகர்கள் கொண்டாட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். 

ரசிகர்கள் மட்டுமின்றி திரைப்பிரபலங்கள் பலரும் கூட மாஸ்டர் படத்தை காண ஆவலுடன் இருப்பதாக தெரிவித்திருந்தனர். இதற்கு முன்னதாக சிம்பு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் என் ரசிகர்கள் மாஸ்டர் படம் பாருங்கள்... விஜய் ரசிகர்கள் ஈஸ்வரன் படம் பாருங்கள் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஈஸ்வரன் பட இயக்குநரான சுசீந்திரன் தன்னுடைய சொந்த ஊரில் முதல் நாள் முதல் காட்சியாக மாஸ்டர் திரைப்படத்தை கண்டு ரசித்துள்ளார். 

 

இதையும் படிங்க: அடக்கொடுமையே... கண்கூசும் அளவிற்கு படுகேவலமான உடையில்... 40வது பிறந்தநாளை கொண்டாடிய கிரண்...!

இதுகுறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர்,  விஜய் சார் உடைய மாஸ்டர் திரைப்படம் பார்த்தேன். ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்த்தேன். எங்க ஊரில் முதன் முறையாக காலை 5 மணிக்கு படம் போட்டிருக்காங்க. ஒரு வருஷம் கழிச்சி மறுபடியும் திருவிழாவிற்கு வந்த மாதிரி இருக்கு. துப்பாக்கி படத்திற்கு பிறகு விஜய் சார் நடிப்பில் எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம் மாஸ்டர். இது விஜய் சாருக்கு ஒரு மாஸ்டர் பீசாக அமைந்துள்ளது. ரொம்ப பிரமாதமாக விஜய் நடித்துள்ளார். இப்படியொரு ஸ்கிரிப் பண்ண லோகேஷ் கனகராஜுக்கு வாழ்த்துக்கள். விஜய் சேதுபதி வில்லதனத்தை கூட ரசிக்கிற மாதிரி பண்ணியிருக்கார். கண்டிப்பா இந்த படம் பொங்கலுக்கு வெற்றி படமாக அமைத்துள்ளது. இது மாஸ்டர் பொங்கல். விஜய், விஜய் சேதுபதி, லோகேஷ் கனகராஜ் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்.