துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவின் போது பெரியார் குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ முடியாது என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அதிரடியாக தெரிவித்தார். இதையடுத்து பெரியார் குறித்து பேசிய ரஜினி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் திராவிடர்கழகம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. 

இதையும் படிங்க: பெரியாரின் யோக்கிதையை சொன்னா ஏன் சில பேருக்கு எரியுது?... ரஜினிக்காக வரிந்து கட்டும் பிரபல நடிகர்..!

இதுகுறித்து திராவிடர் விடுதலை கழக சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி அளித்துள்ள மனுவில், "1971-ம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் பெரியார் ராமர், சீதை உருவங்களை கொச்சைப்படுத்தியது குறித்து ரஜினி பேசிய பேச்சுக்கு நடவடிக்கை எடுக்கும்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில்  புகார் அளித்துள்ளோம். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 

இதையும் படிங்க: பெரியாரிஸ்டுகளை கிழி, கிழியென கிழிக்கும் ரஜினி ரசிகர்கள்... உலக அளவில் ட்ரெண்டாகும் "மன்னிப்பு கேட்க முடியாது"...!

பெரியார் பற்றி பொய்யான தகவல்களை பரப்பி, அவரது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பதாகவும் கோவை காட்டூர் காவல் நிலையத்தில் ரஜினி மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த நேருதாஸ் என்பவர் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலை கழகம் சார்பில் மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் காட்டூர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரை அடிப்படையாக கொண்டு ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. 

இதையும் படிங்க: பெரியார் விவகாரம்: மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல... மறக்க வேண்டிய சம்பவம்... ஆன்மீக அரசியலில் அதிரடி காட்டும் ரஜினி..!

எதிர்மனுதாரர்களாக கோவை மாநகர காவல் ஆணையர், காட்டூர் காவல் ஆய்வாளர் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.