துக்ளக் பத்திரிகையின் 50ம் ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராமர் சிலையை பெரியார் செருப்பால் அடித்தார் எனக்கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினிகாந்த் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் ஸாரி, பெரியார் குறித்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் இல்லாத எதையும் பற்றி நான் பேசவில்லை, பத்திரிகைகளில் வெளியான செய்திகளை வைத்தே பேசியதாகவும், தனது கருத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என்றும் உறுதியாக கூறினார். 

இதையும் படிங்க: பெரியார் விவகாரம்: மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல... மறக்க வேண்டிய சம்பவம்... ஆன்மீக அரசியலில் அதிரடி காட்டும் ரஜினி..!

ரஜினியின் இந்த பேச்சு தமிழகத்தையே பரபரப்பாக்கியுள்ள இந்த சமயத்தில் அவர் கூறிய மன்னிப்பு கேட்க முடியாது என்ற வார்த்தையை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ட்விட்டரில் உலக அளவிற்கு ட்ரெண்ட் செய்து வருகின்றனர். ரஜினியின் இந்த தைரியமான பேச்சு, அவரது ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது. #மன்னிப்பு_கேட்க_முடியாது என்ற ஹேஷ்டேக்கில் ரஜினிகாந்தின் மாஸ் வசனங்கள், போட்டோஸ், ஸ்டைலிஷ் வாக் என லட்சக்கணக்கான ட்வீட்களை அவர்களது ரசிகர்கள் தெறிக்கவிட்டுள்ளனர்.