துக்ளக் பத்திரிகையின் 50ம் ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ராமர் சிலையை பெரியார் செருப்பால் அடித்தார் எனக்கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரஜினிகாந்த் தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

இதுகுறித்து தனது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஜினிகாந்த், இல்லாத எதையும் நான் பேசவில்லை, பத்திரிகை செய்திகளில் வந்ததை வைத்தே பேசினேன். பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது என ஒரே போடாக போட்டார். ரஜினியின் இந்த பேச்சு தமிழகத்தையே பரபரப்பாக்கியது.

இதையும் படிங்க: பெரியாரிஸ்டுகளை கிழி, கிழியென கிழிக்கும் ரஜினி ரசிகர்கள்... உலக அளவில் ட்ரெண்டாகும் "மன்னிப்பு கேட்க முடியாது"...!

இதையடுத்து #மன்னிப்பு_கேட்க_முடியாது  என்ற ஹேஷ்டேக்கை சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் ட்விட்டரில் இந்திய மற்றும் உலக அளவிற்கு ட்ரெண்ட் செய்தனர். ரஜினியின் இந்த தைரியமான பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், இந்து அமைப்பினர் சப்போர்ட் செய்து வரும் நிலையில், திரைப்பிரபலங்களும் சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். 

இதையும் படிங்க: பெரியார் விவகாரம்: மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல... மறக்க வேண்டிய சம்பவம்... ஆன்மீக அரசியலில் அதிரடி காட்டும் ரஜினி..!

சூப்பர் ஸ்டாருக்கு ஆதரவாக குஷ்பூ, மீரா மிதுன் ஆகியோர் ட்வீட் செய்துள்ள நிலையில், பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கரும் ரஜினிகாந்திற்கு ஆதரவாக ட்வீட் செய்துள்ளார். "தலைவர் எப்போதும் உண்மையை பேசிடுவார்... உண்மையை சொன்னா ஏன் சில பேருக்கு எரியுதுன்னு தெரியல" என பதிவிட்டுள்ளார். #IStandWithRajinikanth என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பலரும் ரஜினிக்கு சப்போர்டாக ட்வீட் செய்து வருகின்றனர்.