பெரியார் விவகாரம்: மறுக்க வேண்டிய சம்பவம் அல்ல... மறக்க வேண்டிய சம்பவம்... ஆன்மீக அரசியலில் அதிரடி காட்டும் ரஜினி..!

மேலும் 1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த அந்த சம்பவம் மறுக்க முடியாதது. அதே நேரத்தில் மறக்க வேண்டியது என்றும்  தெரிவித்தார். 

Rajini Said Periyar Issue Not an Denied incident an event to Forgotten

சென்னையில் கடந்த செவ்வாய் கிழமை நடைபெற்ற துக்ளக் இதழின் 50ம் ஆண்டு விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி, 1971ம் ஆண்டு உடை இல்லாமல் இருக்கும் ராமன், சீதை சிலைக்கு செருப்பு மாலை போட்டு திராவிடர் கழகத்தினர் ஊர்வலம் எடுத்துச் சென்றார். அதற்கு தலைமை தாங்கிய பெரியார் ராமன் உருவத்தை செருப்பால் அடித்தார். அது தொடர்பாக யாரும் செய்தி வெளியிடாத நிலையில் துக்ளக் மட்டுமே அதை அட்டை படத்தில் போட்டு கடுமையாக கண்டித்தது. அதனால் துக்ளக் பத்திரிகைக்கு கருணாநிதி அரசு தடை விதித்தது என்று தெரிவித்தார். 

Rajini Said Periyar Issue Not an Denied incident an event to Forgotten

பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் தனது பேச்சுக்கு ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்காவிட்டால், போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தை முற்றுகையிடுவோம் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் அறிவித்திருந்தது. 

Rajini Said Periyar Issue Not an Denied incident an event to Forgotten

மேலும் பெரியாரை இழிவுபடுத்திய ரஜினி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் புகார்கள் அளிக்கப்பட்டது. ரஜினியின் உருவ பொம்மையை எரித்து ஆதி தமிழர் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Rajini Said Periyar Issue Not an Denied incident an event to Forgotten

இந்நிலையில் இன்று தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், பெரியார் பற்றி பேசியதற்கு மன்னிப்பு கேட்கவோ, வருத்தம் தெரிவிக்கவோ முடியாது என திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் 1971ம் ஆண்டு சேலத்தில் நடந்த அந்த சம்பவம் மறுக்க முடியாதது. அதே நேரத்தில் மறக்க வேண்டியது என்றும்  தெரிவித்தார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios