பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திர பட்டியலில் இடம்பிடித்துள்ள பிரபல நடிகையும், உலக அழகியுமான நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே அச்சு அசலாக இருக்கும் பெண் ஒருவர் வெளியிட்டுள்ள டிக் டாக் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்: 'கருப்புராஜா வெள்ளைராஜா'... கிடப்பில் போட்டதை கிளறுகிறாரா? பிரபுதேவா - நயன் பற்றி உண்மையை உடைத்த தயாரிப்பாளர்!
 

உலக அழகி, நடிகை ஐஸ்வர்யா ராய் தன்னுடைய 21 ஆவது வயதில், 1994ஆம் ஆண்டு, ஆர்டிடெக்ச்சர்  படிப்பு படித்துக்கொண்டிருந்த போது, உலக அழகி பட்டத்தை பெற்றார்.

மொத்தம் 87 நாட்டைச் சேர்ந்த அழகிகள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், இந்தியாவை சேர்ந்த நடிகை ஐஸ்வர்யாராய் உலக அழகியாக முடிசூட்டப்பட்டார். இது இந்தியாவையே பெருமை படுத்தும் விதமாகவும் இருந்தது.

மேலும் செய்திகள்: குழந்தையாக இருக்கும் போதே தமிழ் மேகசின் கவர் போட்டோவில் இடம்பிடித்த ராஷ்மிகா! வைரலாகும் புகைப்படம்..!
 

அழகியாக தேர்வு செய்ய பட்டபின், ஒரு சில வருடங்களில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'இருவர்' படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தது மட்டும் இன்றி மிகவும் அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்து அசத்தியிருந்தார். பின்னர் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக மாறினார். 

பின் கடந்த 2007 ஆம் வருடம், பிரபல பாலிவுட் நடிகர் அபிதாபச்சனின் மகன், அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின், அதிக அளவில் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டாலும், வலுவான கதாப்பாத்திரம் அமைந்தால் நடிக்கிறார். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பின், தற்போது இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்து வருகிறார்.  

மேலும் செய்திகள்: இயக்குனர் ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், சிறுத்தை சிவா உள்ளிட்ட பல முன்னணி டைரக்டர்கள் படத்தில் நடித்த அரிய தொகுப்பு
 

இந்தப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக போடப்பட்டுள்ள ஊரங்கின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்: ஐஸ்வர்யா ராய், நயன்தாரா, சன்னி லியோன் போன்ற பிரபலங்களின் பாஸ்போட் புகைப்படத்தை பாத்துருக்கீங்களா?
 

இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண் ஒருவர், அஜித், அப்பாஸ், தபு, மம்முட்டி ஆகியோர் நடித்து கடந்த 2000 ஆம் ஆண்டு வெளியான 'கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்' படத்தில், ஐஸ்வர்யா ராய் மம்முட்டியிடம் பேசும் வசனத்தை பேசி டப்பிங் செய்துள்ளார். இவரின் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.