சுதாகொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான சூரரைப் போற்று திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என பல்வேறு தரப்பினரும் சூர்யாவிற்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். மனுஷன் சும்மா நடிப்பில் பின்றாருய்யா? என ரசிகர்கள் முதல் சக நடிகர்கள் வரை சோசியல் மீடியாவில் மனம் திறந்து பாராட்டி வருகின்றனர். 

 

இதையும் படிங்க: உடலில் ஆடையின்றி... கடற்கரையில் பிக்பாஸ் ஜூலி செய்த காரியம்... வைரல் போட்டோ...!

இந்த படத்தில் சிறிது நேரமே தோன்றினாலும் மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் குரலில் அச்சு பிசகாமல் பேசிய டப்பிங் கலைஞர் நவீன் முரளிதர் உடைய பங்களிப்பு மிகவும் முக்கியமானது. படத்தை பார்த்த மறுகணமே அப்துல் கலாமிற்கு டப்பிங் பேசியது யார் என ரசிகர்கள் தேட ஆரம்பிக்கும் அளவிற்கு அனைவரையும் அவருடைய டப்பிங் கவர்ந்தார். 

இந்நிலையில் நவீன் தனது முகநூல் பக்கத்தில், “அப்துல்கலாம் ஐயாவின் குரலில் பேச வாய்ப்பு கொடுத்த சூர்யா அவர்களுக்கு மிகவும் நன்றி. இந்த படத்தில் பணிபுரிய எனக்கும் ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தது குறித்து நான் பெருமைப்படுகிறேன். மேலும் சூர்யா அவர்களுக்கு நடிக்க தெரியாது என்று யாரோ சொன்னாங்க, உண்மைதான். உங்களுக்கு நடிக்க தெரியாது, ஆனால் இந்த படத்தில் கேரக்டராகவே வாழ்ந்து காட்டி இருக்கின்றீர்கள்’ என கூறியுள்ளார். 

 

இதையும் படிங்க: கழுத்தில் மாலையுடன் மணப்பெண் நயன்தாரா... மாப்பிள்ளை விக்னேஷ் சிவனை வலைவீசி தேடும் ரசிகர்கள்... வைரல் போட்டோஸ்!

இந்த பதிலடி யாருக்கு என்று தெரிகிறதா? தன்னைத் தானே சூப்பர் மாடல் என சொல்லிக்கொண்டு சூர்யாவிற்கு சுத்தமாக நடிப்பே வராது, அவர் அப்பாவால் தான் சினிமாவிற்கு வந்த என விமர்சித்து வருகிறாரே மீரா மிதுன் அவரை தான் சொல்லிகிறார் என்று ரசிகர்கள் கண்டுபிடித்து விமர்சித்து வருகின்றனர்.