பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய மோகன், கிரவுடு பண்ட் முறையில் திரெளபதி படத்தை இயக்கியுள்ளார். இந்தப்படத்தில் அஜித் மைத்துனர் ரிச்சர்ட் கதாநாயகனாக நடித்துள்ளார். திரெளபதி ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு குறிப்பிட்ட சாதியினர் நாடகக் காதலில் தங்கள் வீட்டு பெண்களை ஏமாற்றி, கற்பழித்து வீடியோ எடுத்து மிரட்டி அதன்மூலம் பணம் பறிப்பதாகவும், அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த இந்தப்படத்தை எடுத்துள்ளதாகவும் கூறுகிறார் இயக்குநர் மோகன். ட்ரெய்லரில் வரும் வசனங்களும் பரபரப்பை கிளப்புகிறது. 

வீடியோ எல்லாம் வேண்டாம்ணே... எங்கப்பாவுக்கு தெரிஞ்சா உயிரையே விட்டுடுவாரு என ஒரு பெண் கதற, ’நீ ஓடி வரும்போதே உங்க அப்பன் அங்க உசுர விட்டிருப்பான்’என மிரட்டுகிறார் ஒருவன். அடங்குனா அடங்கக்கூடாதுனு எங்கண்ணே சொல்லிருக்காப்ல. பெரிய வீட்டு பொண்ணுங்கள கல்யாணம் பண்ணினால் தான் கெத்துனு எங்கண்ணே சொல்லிருக்கிறாப்ல’’என பேசும் வசனம் நிஜத்தில் அரசியல் கட்சி தலைவர் ஒருவரை குறிப்பதாக இருக்கிறது. 

அம்மணம் பொண்ணுங்களுக்கு மட்டும் தான் அவமானமா? ஏன் உனக்கில்ல என பெண்கள் பேசும் வசனம்  சாட்டையடியாய் இருக்கிறது. விவசாய தற்கொலை, கடன் தற்கொலை என செத்தவன் பாதிப்பேர் பொண்ணை பெத்தவர்தாண்டா என வரும் வசனம் உலுக்கி எடுக்கிறது. அவங்க ஊருக்குள்ள நாம கால வைக்கணும்னா அவங்க வீட்டு பொண்ணு மேல நாம கையை வைச்சே ஆகணும் என வில்லன் பேசும் வசனத்தில் சூழ்ச்சியின் வெறித்தன வெளிப்படுகிறது. 

எங்களுக்கு மண்ணு பொண்ணு ரெண்டும் முக்கியம்... மீறி கைய வச்ச கைய வெட்டுவோம்... நாயகி பேசும் வசனத்தில் மானமும் வீரமும் தெறிக்கிறது. இந்தப்படத்தின் டிரெய்லரை ஒருசாரர் கொண்டாடி வரும் நிலையில் மற்றொரு தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. படம் ரிலீசாகும்போது இந்த எதிர்ப்பு அதிகரிக்கலாம். அதேவேளை எதிர்ப்பை தாண்டி பலமடங்கு ஆதரவும் பெருகி வருகிறது.