MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Vishwanath And Sons: கருப்பு ஃபீவர் அடங்குவதற்குள் சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி வந்தாச்சு

Vishwanath And Sons: கருப்பு ஃபீவர் அடங்குவதற்குள் சூர்யாவின் அடுத்த பட ரிலீஸ் தேதி வந்தாச்சு

Vishwanath And Sons Release Date : கருப்பு படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்துள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : May 28 2026, 12:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Vishwanath And Sons Release Date
Image Credit : X

Vishwanath And Sons Release Date

சூர்யா ரசிகர்களுக்கு 2026-ம் ஆண்டு ஒரு மறக்க முடியாத ஆண்டு என்றே சொல்லலாம். ஏனெனில் நடிகர் சூர்யாவுக்கு தியேட்டரில் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் படம் கிடைத்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இதனால் ஒரு மிகப்பெரிய கம்பேக் கொடுக்க வேண்டும் என்கிற வெறியோடு காத்திருந்தார் சூர்யா. அவரின் அந்த நீண்ட நாள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்மையில் வெளியான அவரது கருப்பு படம் அமைந்தது. சூர்யாவின் கெரியரில் மிகப்பெரிய வெற்றிப்படமாக கருப்பு மாறி உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
கம்பேக் கொடுத்த சூர்யா
Image Credit : X

கம்பேக் கொடுத்த சூர்யா

சூர்யாவின் கெரியரில் முதன்முதலில் 200 கோடிக்கு மேல் வசூல் அள்ளிய படம் கருப்பு. அதுமட்டுமின்றி திரையரங்குகளில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வரும் அப்படம் 300 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இப்படி கருப்பு திரைப்படம் கொடுத்த குஷியில் திக்குமுக்காடிப் போய் இருக்கும் சூர்யா ரசிகர்களுக்கு மேலும் ஒரு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக இன்று மிகப்பெரிய அப்டேட் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அது வேறெதுவுமில்லை நடிகர் சூர்யாவின் அடுத்த படமான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் தேதி தான்.

Related Articles

Related image1
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Related image2
Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
35
சூர்யாவின் அடுத்த படம்
Image Credit : Sithara Entertainments

சூர்யாவின் அடுத்த படம்

நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் என்கிற திரைப்படம் உருவாகி இருக்கிறது. அப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை சித்தாரா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி இருந்தது. அதன்பின்னர் படத்தின் டீசரை வெளியிட்டு மேலும் ஹைப் ஏத்தி இருந்தனர். அந்த டீசரில் அப்படம் இந்த ஆண்டு ஜூலை மாதம் ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்டு இருந்தனர்.

45
ரிலீஸ் தேதி அறிவிப்பு
Image Credit : X

ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஆனால் தற்போது அதில் ஒரு ட்விஸ்ட் ஆக விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப்போய் உள்ளது. அப்படம் வருகிற ஆகஸ்ட் 14-ந் தேதி திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஒரு சிறப்பு போஸ்டருடன் அந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர். அந்த போஸ்டரில் நடிகர் சூர்யா, வெளிநாட்டில் சாலை ஓரமாக குடைபிடித்தபடி போனை யூஸ் பண்ணுவது போன்ற போஸ் இடம்பெற்றுள்ளது. அந்த போஸ்டரில் பார்க்கவே செம ஸ்டைலிஷ் ஆக காட்சி அளிக்கிறார் சூர்யா.

55
அடுத்த ஹிட்டுக்கு ரெடியான சூர்யா
Image Credit : X

அடுத்த ஹிட்டுக்கு ரெடியான சூர்யா

கருப்பு படத்தின் ஃபீவரே இன்னும் குறையாத நிலையில், அதற்குள் சூர்யாவின் அடுத்த பட அப்டேட் வந்துள்ளதால், சூர்யா ரசிகர்கள் செம சந்தோஷத்தில் உள்ளனர். கருப்பு படத்தைப் போல் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படத்தை இயக்கியுள்ள வெங்கி அட்லூரி இதற்கு முன்னதாக இயக்கிய வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய இரண்டு படங்களுமே பாக்ஸ் ஆபிஸில் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளி சாதனை படைத்தன. அந்த பட்டியலில் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சூர்யா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ilaiyaraaja : இளையராஜாவை காப்பாற்ற பாடகி ஜானகி செய்த உதவி… பலருக்கும் தெரியாத ரகசியம்!
Recommended image2
Peddi First Review : ராம் சரணின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? பெத்தி முதல் விமர்சனம் இதோ
Recommended image3
Pandian Stores 2 : கதிர் - குமார் இடையே அடிதடி... தடுக்கப்போன முத்துவேலுக்கு நேர்ந்த விபரீதம்
Related Stories
Recommended image1
Karuppu Box Office Collection : கங்குவா லைஃப்டைம் வசூலை 3 நாளில் வாரிசுருட்டிய கருப்பு... பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைத்த சூர்யா..!
Recommended image2
Suriya : செஞ்சுரி அடித்த கருப்பு... 100 கோடி கிளப்பில் உள்ள டாப் 6 சூர்யா படங்கள் என்னென்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved