“வன்னியர் வளர்ந்தா வயிறு எரியுதாடா?”.... தன்னை விமர்சித்த நெட்டிசனை தாறுமாறாக கிழித்த திரெளபதி இயக்குநர்....!

இப்படி ட்விட்டரில் படு ஆக்டீவாக இருக்கும் மோகன் ஜி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு எதிராக பதிவிட்ட ஒரு கருத்து பிரச்சனையை கிளப்பியுள்ளது. 

Draupathi Director Mohan G Slams Netizen For Critic his Tweet

நாடக காதலை தோலுரித்து காட்டிய திரெளபதி படத்தை இயக்கியவர் மோகன் ஜி. ரிச்சர்ட், ஷீலா, கருணாஸ், நிஷாந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'திரெளபதி' படம் கூட்டு நிதி முறையில் தயாரிக்கப்பட்டது. தியேட்டர்களில் மட்டுமே 18 நாட்கள் ஓடியுள்ள இந்த படம், தமிழ்நாட்டில் மட்டும் அந்த படம் 14.28 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. அதுமட்டுமில்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் “தர்பார்” படத்தை விட “திரெளபதி” படத்திற்கு கிடைத்த வரவேற்பு அனைவரையும் வாய் பிளக்க வைத்தது. 

Draupathi Director Mohan G Slams Netizen For Critic his Tweet

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

இயக்குநர் மோகன் ஜி, தனது படங்களில் மட்டுமல்லாது சோசியல் மீடியா மூலமாகவும் மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். சமீபத்தில் கூட டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வலியுறுத்தி, பெண்கள் தங்களது சோசியல் மீடியா பக்கங்களில் #NoMoreTASMAC என்று பதிவிடுங்கள் என்று யோசனை கொடுத்தார். அந்த ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் ட்ரெண்டானது. அதேபோல் ஜோதிகாவின் பெரிய கோவில் குறித்த சர்ச்சை பேச்சுக்கும் கண்டனம் தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: தயாரிப்பாளர்கள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ளும் ராஷ்மிகா மந்தனா... இப்ப இது தேவையா?

இப்படி ட்விட்டரில் படு ஆக்டீவாக இருக்கும் மோகன் ஜி, மக்கள் செல்வன் விஜய் சேதுபதிக்கு எதிராக பதிவிட்ட ஒரு கருத்து பிரச்சனையை கிளப்பியுள்ளது. பசிக்கு தடுப்பூசி கண்டுபிடித்தால் நன்றாக இருக்கும் என விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த ட்வீட்டிற்கு பதில் கொடுத்த மோகன் ஜி,   "பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா.." என்று தெரிவித்திருந்தார். 

இதையும் படிங்க: சூப்பர் ஸ்டார் செல்ல பேரனுக்கு இன்று பிறந்தநாள்... வைரலாகும் கேக் கட்டிங் போட்டோ...!

இந்த பதிலை பார்த்த நெட்டிசன்களில் ஒருவர் “இரண்டு படம் எடுத்துவிட்டு இது பண்ணுகிற அலப்பறை தாங்க முடியலை” என்று கமெண்ட் செய்திருந்தார். அதை பார்த்து கடுப்பான மோகன், “படம் எடுத்தா பேச கூடாதாடா..  எடுக்குறதுக்கு முன்னாடியும் இப்படிதான்டா பேசுனேன்.. வன்னியர் ஒருத்தன் வளர்ந்தா உங்களுக்கு எரிய தான்டா செய்யும்.. இன்னும் பலர் திரைத்துறையில் வளர தான்டா போறாங்க.. வயிறு எரிந்து கதறுங்கடா..” என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios