'பழைய வண்ணாரப்பேட்டை' படத்தை தொடர்ந்து, இயக்குனர் மோகன் நடிகர் ரிஷி ரிச்சர்டை வைத்து இயக்கிய இருந்த திரைப்படம் 'திரௌபதி' . இந்த திரைப்படம் பல்வேறு எதிர்ப்புகளை தாண்டி, கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியானது பல்வேறு திரையரங்கங்களில் மிகவும் விமர்சையாக வெளியானது.

திரைப்படம் வெளியான நாளில் இருந்து, தற்போது வரை இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில் முதல் நாள் அன்று தமிழ்நாட்டில் மட்டும் 2.76 கோடி வசூல் செய்த நிலையில், இரண்டாவது நாளாக 2.18 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் தொடர்ந்து ரசிகர்கள் படத்திற்கு நல்ல ஆதரவை கொடுத்து வருகின்றனர். நிதி திரட்டப்பட்டு உருவாக்கப்பட்ட இந்த படத்திற்கு 'ஜிஎம் கார்ப்பரேஷன்'  தயாரித்திருந்தது. இந்த படத்தில் ஷீலா, கருணாஸ், நிஷா, சௌந்தர்யா, லீனா, உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.