கணவர் இறப்பு குறித்து அவதூறு பரப்ப வேண்டாம்..மீனாவின் உருக்கமான பதிவு!

கணவரின்  இறுதி சடங்கின் போது மீனா நண்பர்களுடன் பேசி சிரித்தாகவும், முன்னரே தன கணவரை ஒதுக்கி வைத்திருந்தார் என்றும் ஊடகங்களில் செய்தி பரவியது.

Dont spread slander about husband death Meena's emotional post

குழந்தை நட்சத்திரம் மீனா ( meena) :

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முதல் படத்திலேயே ரசிகர்களை பெற்றவர் மீனா. சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான நெஞ்சங்கள் மூலம் 1982 -ல் திரையுலகிற்குள் அடியெடுத்து வைத்த மீனா. அன்புள்ள ரஜினிகாந்தின் வெகுவாக பாராட்டப்பட்ட பேபி ஸ்டாராக மாறினார்.

நாயகியாக மீனா :

தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம், இந்தி படங்களில் நடித்துள்ள இவர் 90 களில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். அனைத்து மொழி சூப்பர் ஸ்டார்களுக்கு ஜோடியாக நடித்து விட்டார் மீனா. ரஜினி , கமல், பிரபு, கார்த்தி என டாப் 10 ஹீரோக்களுடன் ஜோடிபோட்டுள்ள இவர் என ராசாவின் மனசிலே படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக கதாநாயகி பாத்திரம் பூண்டிருந்தார். முன்னரே, தெலுங்கு படமான நவயுகத்தில் ஹீரோயினி அறிமுகம் நடந்தேறியது.

மேலும் செய்திகள்... மகளுடன் மழையில் ஆட்டம் .. ஸ்ரேயா சரணின் - கியூட் வீடியோ!

Dont spread slander about husband death Meena's emotional post

வருடத்தில் அதிக படங்களை கொடுத்த நடிகை :

செல்லம் கொஞ்சும் குரல் , அழகான கண்கள் என கவர்ந்திழுத்து மீனா வருடத்திற்கு குறையால் 5 ,6 படங்களையாவது கொடுத்து விடுவார். 90 களின் பிறபகுதியில் வருடத்திற்கு 10 படங்களில் கமிட்டாகும் நாயகியாக ஜொலித்து வந்துள்ளார் மீனா. திருமணத்திற்கு பிறகு படங்களில் ஒப்பந்தமாவதை குறைத்து கொண்ட இவர் இவர் இறுதியாக  ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்தே -ல் நடித்திருந்தார்.
 
மீனாவின் மண வாழ்க்கை :

டாப் 10 நாயகியாக இருந்த இவர் கடந்த 2010-ம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த பொறியாளர் வித்யாசாகரை  திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமண வரவேற்பில்  தென்னிந்திய முன்னணி நடிகர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த ஜோடிக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். நைனிகா தனது 5 வயதில் விஜயின் தெறி திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

மேலும் செய்திகள்...கமலின் விக்ரம் படம் இதுவரை பெற்ற வசூல் வேட்டை எவ்வளவு தெரியுமா.?

Dont spread slander about husband death Meena's emotional post

மீனா கணவரின் மரணம் :

காதல் தம்பதிகளாக வாழ்ந்த இவர்களது வாழ்வில் கொரோனா பேரிடியை இறக்கி உள்ளது. ஏற்கனவே  நுரையீரல் தொடர்பான நோய்களால் வித்யாசாகர் அவதிப்பட்டு வந்த நிலையில். கடந்த ஜனவரியில் கொரோனா தோற்றால் மொத்த குடும்பமும் பாதிக்கப்பட்டது. பின்னர் வித்யாசாகர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருப்பதாக மீனா பதிவிட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இரு நுரையீரல்களுக்கு செயல் இழக்க மாற்று உறுப்பு கிடைக்காமல் பரிதாபமாக கடந்த 28  அன்று வித்யாசாகர் உயிரிழந்தார்.

பரிதாப நிலையில் நைனிகா :

மீனா கணவரின் மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் ரஜினி உள்ளிட்ட திரை பிரபலங்கள் இறுதி அஞ்சலில் செலுத்தினர். அப்போது சூப்பர் ஸ்டாரை கட்டிப்பிடித்து குழந்தை நைனிகா கதறிய வீடியோ மனதை உருக்கியது. அதோடு ஆண் குழந்தை இல்லாததால் நைனிக்கவே இடுப்பில் துண்டுடன் இறுதிச்சடங்கை மேற்கொண்ட காட்சி பரிதவத்திற்கு உரியதாக இருந்தது.

மேலும் செய்திகள்... ஜிம்மிலிருந்து கட்டு மஸ்தான அழகுடன் நேஹா ஷர்மா, மலைக்கா அரோரா கான் .. அனல் பறக்கும் போட்டோஸ் இதோ!

மீனாவின் உருக்கமான பதிவு :

இதற்கிடையே கணவரின்  இறுதி சடங்கின் போது மீனா நண்பர்களுடன் பேசி சிரித்தாகவும், முன்னரே தன கணவரை ஒதுக்கி வைத்திருந்தார் என்றும் ஊடகங்களில் செய்தி பரவியது. இது குறித்து பதிவிட்டுள்ள நடிகை மீனா , "எனது அன்பு கணவர் வித்யாசாகரின் மறைவால் நான் மிகந்த துக்கத்தில் உள்ளேன்.. எங்கள் தனியுரிமைக்கு மதிப்பளித்து இந்த சூழ்நிலையில் அனுதாபம் கொள்ளுமாறு அனைத்து ஊடகங்களையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இந்த விஷயத்தில் தவறான தகவல்களை வெளியிடுவதை நிறுத்துங்கள். மேலும் ஆறுதல் கூறிய அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Meena Sagar (@meenasagar16)

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios