இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள டான் படத்திலிருந்து ட்ரைலர்  வெளியாகியுள்ளது. வீடியோ இதோ.. 

டாக்டர் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் இந்த ஆண்டு மட்டும் டான், அயலான் மற்றும் மற்றும் எஸ்கே20 உள்ளிட்ட மூன்று திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளது. இதில் டான் படத்தை உதவி இயக்குனராக பணியாற்றிய சிபி சக்ரவர்த்தியின் இயக்குகிறார். இயக்குனரின் அறிமுக படமான இதில் டாக்டர் நாயகி பிரியங்கா மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா, சிவாங்கி, பால சரவணன், சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். இந்த படத்திலிருந்தது ஏற்கனவே சிங்களாக ஜலபுல ஜங்கு மற்றும் பே ஆகிய 2 பாடல்கள் வெளியாகி வைரலாகின.பின்னர் இதிலிருந்து பிரைவேட் பார்ட்டி என்னும் பாடல் வெளியாகியுள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியுள்ள மூன்றாவது சிங்கிளை அரபிக் குத்து பாடலை பாடிய அனிரூத், ஜோனிடா காந்தி பாடியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...Manobala : சிவகார்த்திகேயனின் செயலால் கடுப்பான மனோபாலா... என்ன பொசுக்குனு இப்படி கேட்டுட்டாரு?


.
டான் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த படம் முன்னதாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதி ரிலீஸ் செய்வதாக அறிவிக்கப்பட்டது..ஆனால் ஆர்.ஆர்.ஆர் படம் ரிலீஸ் செய்யப்பட்டதால் இதன் ரிலீஸ் மாற்றப்பட்டது. பின்னர் வருகிற மே 13-ந் தேதி இப்படத்தை வெளியிட உள்ளதாக அறிவித்தனர். டான் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.

மேலும் செய்திகளுக்கு...காதலிக்க சொல்லி பயங்கர டார்ச்சர்.. இயக்குனர் மீது கணவனை பிரிந்த நடிகை பகீர் புகார்.

இந்நிலையில் சிவகார்த்திகேயன் தற்போது நடித்து முடித்துள்ள டான் படத்திலிருந்து ட்ரைலர் வெளியாகியுள்ளது. வீடியோ இதோ..YouTube video player