தெலுங்கு திரையுலகில் அதிரடி ஆக்‌ஷன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் டாக்டர் ராஜசேகர். இவருக்கும் நடிகை ஜீவிதாவுக்கும் திருமணமாகி இளம் வயதில் ஷிவானி, ஷிவாத்மிகா என இரு மகள் உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் ராஜசேகர், மனைவி ஜீவிதா, 2 மகள்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து 4 பேரும் ஐதராபாத்தில் உள்ள சிட்டி நியூரோ சென்டரில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது மகள்களும், ஜீவிதாவும் பூரண குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், நடிகர் ராஜசேகர் மட்டும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். அவ்வப்போது ராஜசேகர் உடல் நிலை குறித்து வதந்தி பரவி வந்த நிலையில், சமீபத்தில் நடிகை ஜீவிதா விளக்கமளித்திருந்தார். 

 

இதையும் படிங்க: நயன்தாராவிற்கு ‘நோ’ சொன்ன தளபதி விஜய்... முடியாதுன்னு ஒத்த வார்த்தையில் முடிச்சிட்டாராம்...!

அதில், முன்பு இருந்ததை விட ராஜசேகரின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், ஆரம்பத்தில் இருந்தே அவர் வென்டிலேட்டரில்  சிகிச்சை பெறுவதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீவிர சிகிச்சையால் பூரண நலம் பெற்ற நடிகர் ராஜசேகர் நல்ல படியாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியுள்ளார். இந்த செய்தி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.