"மாஸ்டர்" பட ஷூட்டிங் அதுபாட்டுக்கு போய்கொண்டிருந்தது. நெய்வேலி ஷூட்டிங் ஸ்பார்டிற்குள் தடாலடியாக நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், விஜய்யிடம் துருவி, துருவி விசாரணை நடத்தியதோடு மட்டுமில்லாமல், வாங்க போலாம் என வண்டியில் வளைத்துப் போட்டு, சென்னை கொண்டு வந்தனர். 

இதையும் படிங்க: வெள்ளை நிற ஜாக்கெட்... உச்சத்தில் நிற்கும் மார்கெட்... ரசிகர்களை கிறங்கடிக்கும் நயன்தாரா போட்டோஸ்...!

பனையூரில் உள்ள விஜய்யின் பண்ணை வீட்டில் வைத்து விடிய, விடிய விசாரணை நடத்திய ஐ.டி. அதிகாரிகள். அவருக்கு சொந்தமான வீடுகளில் சோதனையும் நடத்தினர். விஜய் வீட்டில் ஒரு ரூபாய் கூட கைப்பற்றப்படவில்லை என்று கூறப்படும் நிலையில், சுமார் 1200 கோடி ரூபாய்க்கு கணக்கில் காட்டப்படாத சொத்துக்களை விஜய் வெளிநாடுகளில் வாங்கி வைத்துள்ளார் என்ற தகவலும் லைட்டாக கசிந்துள்ளது. 

இதையடுத்து மீண்டும் ஷூட்டிங்கில் பங்கேற்ற விஜய்யைக் காண, அவரது ரசிகர்கள் நெய்வேலி நோக்கி படையெடுத்தனர். தனக்காக ஓடி வந்த ரசிகர்களுடன் வேன் மீது ஏறி செல்ஃபி எடுத்துக் கொண்ட விஜய், அதை தனது டுவிட்டர் பக்கத்திலும் போஸ்ட் செய்தார். 

இந்நிலையில் ஒவ்வொரு வருடமும் தனது படத்தின் இசைவெளியீட்டு விழாவில் நடப்பு விஷயங்கள் குறித்து பேசுவதை வாடிக்கையாக வைத்திருக்கும் விஜய், இம்முறை என்ன பேசப்போகிறார், வருமான வரித்துறையினரின் சோதனை, அதன் பின்னணியில் இருக்கும் அரசியல் குறித்தெல்லாம் அவர் பேசுவாரா? அதுதொடர்பான குட்டிக்கதை சொல்வாரா? என்ற ரசிகர்களின் எதிர்பார்த்து காத்திருந்தனர். 

இதையும் படிங்க: புதுமாப்பிள்ளை யோகிபாபுவிற்கு சூப்பர் ஸ்டார் மாப்பிள்ளை கொடுத்த அசத்தல் பரிசு...!

"மாஸ்டர்" படத்தின் புரோமோஷன் வேலைகளில் தீவிரமாக இறங்கியுள்ள தயாரிப்பு நிறுவனம், முதல் அறிவிப்பாக காதலர் தினமான பிப்ரவரி 14ம் தேதி அன்று ''ஒரு குட்டி கத'' என்ற முதல் சிங்கிளை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. அதில் என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா....? அதுல எந்த பிரச்சனையும் இல்ல. அதுக்காக படக்குழு வெளியிட்ட ''மாஸ்டர்'' போஸ்டரில் தான் பெரிய சிக்கலே மறைந்திருக்கிறது. 

இதையும் படிங்க: விஜய்யுடன் நடிக்க முதலில் மறுத்து... பின்னர் ஒப்புக்கொண்ட நடிகை... "தளபதி 65" பற்றி மாஸ் அப்டேட்...!

அதில் விஜய் கையில் மது பாட்டிலுடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே 'சர்கார்' படத்தில் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர் வெளியானது. அப்போது அரசியல் கட்சிகள் முதல் பல்வேறு தரப்பினரும் விஜய்க்கு எதிராக கண்டனங்களை எழுப்பினர். இதனிடையே இப்போதைய சூழ்நிலைக்கு இந்த போஸ்டரும் சர்ச்சையில் சிக்கலாம் என்ற கருத்து உருவாகியுள்ளது.