பாலிவுட் திரையுலகின் புகழ் பெற்ற நடன இயக்குநரான சரோஜ் கான் (71) உடல் நலக்குறைவால் மரணமடைந்தது இந்தி திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியில் மறக்க முடியாத பாடல்களான ஏக் தோ தீன், ஹவா ஹவா தம்மா தம்மா போன்ற புகழ் பெற்ற பாடல்களுக்கு நடன இயக்குநராக விளங்கியவர் சரோஜ்கான். 

 

இதையும் படிங்க: “அது கல்யாணமே இல்ல”... உண்மையை ஓபனாக போட்டுடைத்த வனிதா வக்கீல்...!

மூன்று முறை தேசிய விருது வென்ற சரோஜ் கான் கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். திடீர் முச்சுத்திணறல் காரணமாக மும்பை பாந்த்ராவில் உள்ள குருநானக் மருத்துவமனையில் சரோஜ் கான் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளது. இதையடுத்து அவருடைய மூச்சு திணறல் பிரச்சனைக்கு மட்டுமே சிகிச்சை அளித்துள்ளனர். 

 

இதையும் படிங்க: கண்டவன் எல்லாம் கலாய்க்கும் நிலைக்கு கணவரால் தள்ளப்பட்ட சமந்தா... வைரலாகும் இதை பார்த்தால் புரிஞ்சுக்குவீங்க!

இந்நிலையில் இன்று அதிகாலை 2.30 மணி அளவில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் உயிரிழந்தார்.சரோஜ் கானின் இறுதிச்சடங்கு மும்பை புறநகர் மாலட் பகுதியில் இன்று காலை நடைபெற்றது. இவரின் நினைவஞ்சலிக் கூட்டம் 3 நாட்களுக்குப் பின் நடைபெறும் என்று அவருடைய மகள் சுகைனா கான் தெரிவித்துள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் விருப்பமான நடன இயக்குநராக இருந்த சரோஜ் கானின் மறைவு இந்தி திரையுலகையும், ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

இதையும் படிங்க:  பாவாடை, தாவணியில் சும்மா நச்சுன்னு இருக்கும் லாஸ்லியா... வைரலாகும் இலங்கை பெண்ணின் மனதை மயக்கும் அழகு...!

இதனிடையே மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட குறித்து சரோஜ் கான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு மனதை உருக்கும் விதமாக அமைந்துள்ளது. நான் உங்களுடன் சேர்ந்து பணியாற்றியது இல்லை. ஆனால் பலமுறை சந்தித்திருக்கிறோம். உங்கள் வாழ்க்கையில் ஏதோ தவறாகிவிட்டது?. இப்படி நீங்கள் அவசரப்பட்டு ஒரு முடிவு எடுத்ததை நினைத்து அதிர்ச்சி அடைந்தேன். நீங்கள் யாராவது பெரியவர்களிடம் பேசியிருக்கலாம். உங்களுடைய தந்தை, சகோதரிகளையாவது நினைத்து பார்த்திருக்கலாம். அவர்களுக்கு எனது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய அனைத்து படங்களும் எனக்கு பிடிக்கும் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளது.