Asianet News Tamil

இரண்டே படத்தில் மாளவிகா மோகனனுக்கு கூடிய மவுசு... அடுத்த படத்தில் எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

அப்படி மாளவிகா ரகரகமாய் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தியது கைவிடவில்லை. 

Do you know Malavika Mohanan Next bollywood Salary?
Author
Chennai, First Published Jun 25, 2020, 6:33 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழில் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். ஒரே படத்தில் ஓஹோ என அடித்த ஜாக்பாட்டால் தலைவரைத் தொடர்ந்து தளபதியின் படித்தில் நடிக்க கமிட்டானார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜின் ‘மாஸ்டர்’ படத்தின் கதாநாயகியாக நடித்துள்ளார்.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், கொரோனா பிரச்சனை காரணமாக பட ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.  

 

இதையும் படிங்க: கொழு கொழுன்னு இருந்த வித்யுலேகா ராமனா இது?... 30 கிலோ வரை எடையை அசால்டாக குறைத்து ஆளே மாறிட்டாரே....!

இந்நிலையில் “மாஸ்டர்” படத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்தே மாளவிகா மோகனனின் அட்ராசிட்டிகள் தாங்க முடியவில்லை. சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகனன், அவ்வப்போது தனது ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். என்ன தான் இருந்தாலும் தளபதி பட ஹீரோயின் இல்லையா, அதனால் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே லைக்குகளை போட்டு அந்த போட்டோஸை வைரலாக்கி விடுகின்றனர். 

 

இதையும் படிங்க: “சிறுத்தை” படத்தில் நடித்த குட்டி பாப்பாவா இது?.... கண்ணுபடும் அளவிற்கு அழகில் ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்!

குட்டை டவுசரில் தொடங்கி இடை தெரிய புடவை வரை விதவிதமாக கவர்ச்சி காட்டி வருகிறார். காலையில் கண்விழித்தாலே மாளவிகாவின் கவர்ச்சி தரிசனம் தான் எனும் அளவிற்கு தினமும் விதவிதமாக கவர்ச்சி கிளிக்ஸை தட்டிவிட்டு வருகிறார். 
அப்படி மாளவிகா ரகரகமாய் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்தியது கைவிடவில்லை. பாலிவுட் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் மாளவிகா மோகனன். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கடைசி படமான மாம் பட இயக்குநர் ரவி உத்யவார் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க மாளவிகா மோகனனை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 

இதையும் படிங்க:  பிரபல நடிகருடன் ஜோடி போட்ட சாய் பல்லவி... வயிற்றெரிச்சலில் வாயை விட்ட ராஷ்மிகா மந்தனா...!

இந்த படத்தில் மாளவிகா ஆக்‌ஷன் குயினாக களம் இறங்க போகிறாராம். இதற்காக அவர் மார்ஷல் ஆர்ட் பயிற்சிகளை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக 100 நாட்கள் நடிக்க மாளவிகா மோகனன் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்காக இவருக்கு 5 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வந்த கொஞ்ச காலத்திலேயே இரண்டே படங்களில் நடித்த மாளவிகா மோகனனுக்கு 5 கோடி சம்பளமா? என சக கோலிவுட் நடிகைகள் வாய்பிளக்கிறார்களாம். மாளவிகா நடிக்க உள்ள இந்தி படத்தின் ஷூட்டிங் லாக்டவுனுக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios