வங்கியில் வேலை பார்த்து வந்த ஒருவர், திடீரென இயக்குநர் அவதாரம் எடுத்து தனது முதல் படத்திலேயே முத்திரை பதிக்க முடியும் என்றால் அது, லோகேஷ் கனகராஜால் மட்டுமே சாத்தியம். பிரம்மாண்ட நடிகர், நடிகைகள் இல்லை, ஆர்ப்பாட்டமான விளம்பரங்கள் இல்லை, புதுமுகங்களை மட்டுமே நம்பி “மாநகரம்” என்ற படத்தை இயக்கினார். முதல் படமே சூப்பர் ஹிட், தளபதி சொன்னது போல் கோலிவுட்டையே திரும்பி பார்க்க வைத்தார். 

இதையும் படிங்க: “பிகில்” பாண்டியம்மாளின் அடுத்த அதிரடி... மார்டன் டிரஸ் காற்றில் பறக்க கொடுத்த அசத்தல் போஸ்...!

அடுத்து பக்கா கமர்ஷியல் அம்சங்களோடு மாஸ் ஹீரோ கார்த்தியை வைத்து “கைதி” என்ற படத்தை இயக்கினார். ஹீரோயின் கிடையாது, பாட்டு கிடையாது, பகல் சீன் கிடையாது, ரொமான்ஸ் கிடையாது... இப்படி பல கிடையாது அம்சங்களுடன் வெளியான “கைதி” திரைப்படம் தமிழ் சினிமாவில் தனி முத்திரை பதித்தது. வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தளபதி விஜய்யின் “பிகில்” படத்தையே தட்டித்தூக்கியது. 

இதையும் படிங்க: சித்தார்த்தை ஏன் பிரிந்தேன்... முதல் முறையாக மனம் திறந்த சமந்தா...!

அதில் ஷாக்கான விஜய், லோகேஷ் கனகராஜை கூப்பிட்டு தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை கொடுத்தார். அந்த படம் தான் நம்ம “மாஸ்டர்”. வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஹீரோயின் மாளவிகா மோகனன், அதுமட்டுமின்றி பட்டியல் போடவே இடமில்லாத அளவிற்கு நட்சத்திர பட்டாளங்களை கொண்ட, இந்த படத்தின் ஷூட்டிங் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: ஆபாச வெப்சைட்டில் நிர்வாண போட்டோஸ்... கொஞ்சம் கூட சொரணை இல்லாமல் மீரா மிதுன் செய்த காரியம்...!

இந்த  சமயத்தில் “மாஸ்டர்” படத்திற்காக லோகேஷ் கனகராஜ் வாங்கிய சம்பளம் குறித்து வெளியான தகவல் ஒட்டுமொத்த கோலிவுட்டையே வாய்பிளக்க வைத்துள்ளது.“கைதி” படத்திற்காக வெறும் 30 லட்சம் மட்டுமே சம்பளம் வாங்கிய லோகேஷ் கனகராஜ், மாஸ்டரை இயக்கியதற்காக வாங்கிய சம்பளம் ரூ.1.5 கோடியாம். இதை கொண்டாடும் விதமாக தனக்கு பிடித்த காஸ்ட்லி கார் ஒன்றை ஒரு கோடி ரூபாயில் வாங்கியுள்ளாராம் லோகேஷ். இன்னும் ஒரு வருடத்தில் லோகேஷ் கனகராஜ் முன்னணி இயக்குநர் இடத்திற்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர் சினிமா விமர்சகர்கள்.