Asianet News TamilAsianet News Tamil

இளையராஜா பாடல்களை காப்பி அடித்தாரா?

இசைஞானி இளையராஜா 4500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். அவர் இசையமைத்த பாடல்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான பாடல்களே காப்பி அடிக்கப்பட்டவை. இளையராஜாவின் இசையில் எந்தெந்த பாடல்கள் எங்கிருந்து காப்பியடிக்கப்பட்டன என்பதை இங்கே காணலாம்.

Do you know about Ilaiyaraaja Copied songs? rsk
Author
First Published Aug 17, 2024, 11:24 AM IST | Last Updated Aug 17, 2024, 4:29 PM IST

ஒரே சூரியன், ஒரே சந்திரன் எப்படியோ அப்படித்தான் ஒரே இசைஞானி இளையராஜா மட்டுமே. கிட்டத்தட்ட 4500க்கும் அதிகமான பாடல்களை கொடுத்திருக்கிறார். மனதிற்கும், காதிற்கும் இனிமையும், சந்தோஷத்தையும் கொடுப்பதில் இளையராஜாவின் பாடல்கள் முக்கியத்துவம் பெறுகின்றன. இன்பம், துன்பம் என்று எல்லாவற்றிற்கும் ராஜாவின் பாடல்கள் உண்டு. இளையராஜா தனது பாடல்களுக்கு உரிமை கோரி வரும் நிலையில், அவர் மற்ற இசையமைப்பாளர்களால் கவரப்பட்டு அவர்களது இசையிலிருந்து சில பாடல்களை காப்பி அடித்து இசையமைக்கப்பட்ட பாடல்கள் மொத்தமே 15 தான்.

படம் அட்டர் பிளாப்... ஆனாலும் தயாரிப்பாளர் ஹாப்பி! 10 மடங்கு லாபம் ஈட்டி தந்த இளையராஜாவின் ஒரே பாட்டு

அதாவது, அவரது இசையில் வந்த 5000 பாடல்களில் 0.3 சதவிகிதம் தான். அதாவது, 99.7 சதவிகித பாடல்கள் இசைஞானி இளையராஜாவின் இசை ஞானத்தால் உருவாக்கப்பட்டவை. மற்ற 0.3 சதவிகிதம் பாடல்கள் காப்பி அடிக்கப்பட்டவை. அது எந்தெந்த படங்கள், எந்த படங்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டுள்ளது என்ற விவரங்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 15 பாடல்களைத் தவிர வேறு எவராலும் ஒரு பாட்டு மட்டுமின்றி பின்னணி இசையைக் கூட காப்பி அடிக்கப்பட்டவை என்று சொல்ல முடியாது. ஏனென்றால், அந்த 15 பாடல்கள் வேற பாடல்களிலிருந்து காப்பி அடிக்கப்பட்டவை. அந்த 15 பாடல்கள் இதோ…

16 ஆண்டுகள் தவத்திற்கு கிடைத்த பரிசு – 9 விருதுகளை குவித்த பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்!

1. படம் – மௌன ராகம்

பாடல் – மௌன ராகம் தீம்

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – பிளாஸ் டான்ஸ் தீம்

 

2. படம் – முரட்டுக்காளை

பாடல் – எந்த பூவிலும் வாசம்

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் - அன்டோனியோ ரூயிஸ்-பிபோவின் 'கான்சியோன் எட் டான்சா: 2. டான்சா'.

 

3. படம் – சின்ன வீடு

பாடல் – சிட்டு குருவி

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் - அன்டோனின் டுவோராக்கின் சிம்பொனி எண். 9 இல், ஷெர்சோ: மோல்டோ விவேஸ்

 

4. படம் – சின்ன வீடு

பாடல் – சிட்டுக்குருவி வெட்கப்படுது

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – டுவோரக்கின் நியூ வேர்ல்டு சிம்பொனி- 3ஆவது மூவ்மெண்ட்.

 

5. படம் – சத்ரியன்

பாடல் – பூட்டுக்கல் போட்டாலும்

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – சவுண்ட் ஆஃப் மியூசிக் 


6. படம் – தைப்பொங்கல்

பாடல் – கண் மலர்களின்

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – அப்பா’ஸ் - Money money money

இளையராஜாவின் 'தென்றல் வந்து தீண்டும்..' பாடல் உருவான கதை!

 

7. படம் – ப்ரியா

பாடல் – டார்லிங் டார்லிங் டார்லிங்

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – போனி எம் நம்பர் சன்னி

 

8. படம் – ப்ரியா

பாடல் – அக்கரை சீமை அழகினிலே Akkarai seemai azhaginiley

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – கைட்ஸ் – சைமன் டுப்ரீ

 

9. படம் – கிழக்கு வாசல்

பாடல் – அட வீட்டுக்கு வீட்டுக்கு

காப்பி அடிக்கப்பட்ட ஒரிஜினல் பாடல் – மொஸார்டின் 25ஆவது சிம்பொனி

 

10. படம் – கல்யாண ராமன்

பாடல் – காதல் வந்திருச்சு

காப்பி அடிக்கப்பட்ட பாடல் – உரியா ஹீப் - Lady in Black

 

11. பாடல் – நீங்கள் கேட்டவை

பாட – கனவு காணும்

காப்பி அடிக்கப்பட்ட பாடல் – உப்கார் மூவிலியிருலிருந்து காப்பி அடிக்கப்பட்டது.

 

12. படம் – நல்லவனுக்கு நல்லவன்

பாடல் – சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு 

காப்பி அடிக்கப்பட்ட பாடல் – The Tale Of The Kalendar Prince from Rimsky-Korsakov's 1888 work by name 'Scheherazade'.

 

13. படம் – ஒரு கைதியின் டைரி

பாடல் – ஏ பி சி நீ வருவாய் நீ

காப்பி அடிக்கப்பட்ட பாடல் - L'Arlésienne

 

14. படம் - கிழக்கே போகும் ரயில்

பாடல் – பூவரசம் பூத்தாச்சு

காப்பி அடிக்கப்பட்ட பாடல் - Jeevan Se Na Haar from Door ka Rahi

 

15. படம் – என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்

பாடல் – ஹரே ராமா ஹரே கிருஷ்ணா

காப்பி அடிக்கப்பட்ட பாடல் – டும் மேரே டும்

 

16. படம் – மைக்கேல் மதன காமராஜன்

பாடல் – ரம் பம் பம்

காப்பி அடிக்கப்பட்ட பாடல் - Rock around the clock

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios