MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • 16 ஆண்டுகள் தவத்திற்கு கிடைத்த பரிசு – 9 விருதுகளை குவித்த பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்!

16 ஆண்டுகள் தவத்திற்கு கிடைத்த பரிசு – 9 விருதுகளை குவித்த பிருத்விராஜின் ஆடு ஜீவிதம்!

சிறந்த நடிகர் முதல் சிறந்த ஒளிப்பதிவாளர் வரை 9 கேரளா விருதுகளை ஆடு ஜீவிதம் படம் வென்றுள்ளது. 2008 ஆம் ஆண்டு ஆடு ஜீவிதம் நாவலை படித்ததிலிருந்து இயக்குநர் பிளெஸ்ஸி படமாக்க விரும்பினார், ஹீரோவாக பிருத்விராஜை தேர்வு செய்தார்.

2 Min read
Author : Rsiva kumar
| Updated : Aug 17 2024, 09:54 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Aadujeevitham 54th Kerala State Film Awards

Aadujeevitham - 54th Kerala State Film Awards

பிருத்விராஜ் நடிப்பில் உருவான ஆடு ஜீவிதம் படமான 16 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு திரைக்கு வந்து வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. ரூ.82 பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்தப் படமானது ரூ.160 கோடி வரையில் வசூல் குவித்து சாதனை படைத்தது. இந்த நிலையில் தான் எந்தப் படமும் செய்யாத ஒரு சாதனையை ஆடு ஜீவிதம் செய்துள்ளது. எப்படி என்றால் இன்று அறிவிக்கப்பட்ட 54ஆவது கேரளா மாநில திரைப்பட விழாவில் ஆடு ஜீவிதம் 9 விருதுகளை குவித்துள்ளது.

27
54th Kerala State Film Awards

54th Kerala State Film Awards

சிறந்த நடிகர் முதல் சிறந்த ஒளிப்பதிவாளர் வரையில் 9 மாநில விருதுகளை ஆடு ஜீவிதம் படம் வென்றுள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு ஆடு ஜீவிதம் என்ற நாவலை படித்ததிலிருந்த அந்த நாவலை படமாக்க இயக்குநர் பிளெஸ்ஸி விரும்பினார். இதற்கான ஹீரோ தேர்வாக பிருத்விராஜை தேர்வு செய்தார். இதைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே அதற்கான வேலையை தொடங்கினார். ஆம், ஆடு ஜீவிதம் நாவலை எழுதிய எழுத்தாளர் பென்யாமிடம் உரிமையை வாங்கி திரைக்கதை எழுதத் தொடங்கினார்.

37
Aadujeevitham

Aadujeevitham

எனினும், பட்ஜெட் கட்டுப்பாடுகள் காரணமாக இந்தப் படமான திரைக்கதை எழுதும் பணியோடு நின்றது. கிட்டத்தட்ட 5, 6 ஆண்டுகளுக்கு பிறகு 2015 ஆம் ஆண்டு பிளெஸ்ஸி ஒரு தயாரிப்பாளரை தேடிப் பிடித்தார். ஜிம்மி ஜீன் லூயிஸ் மற்றும் ஸ்டீவன் ஆடம்ஸ் ஆகியோர் பிளெஸ்ஸியுடன் இணை தயாரிப்பாளர்களாக இணைந்தனர். படத்திற்கு ஏ ஆர் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

47
Aadujeevitham 54th Kerala State Film Awards

Aadujeevitham 54th Kerala State Film Awards

இதைத் தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரையில் இந்தியாவின் கேரளாவில் சில காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. அதோடு, ஜோர்டான் வாடி ரம், சஹாராவில் உள்ள அல்ஜீரியா பாலைவனத்தில் பல்வேறு கட்டங்களாக படப்பிடிப்பு நடைபெற்றது. இதற்கிடையில் கோவிட் தொற்று காரணமாக படக்குழுவினர் ஜோர்டான் நாட்டில் சிக்கித் தவித்தனர்.

57
Aadujeevitham

Aadujeevitham

கடைசியாக 2022 ஆம் ஆண்டு படம் எடுத்து முடிக்கப்பட்டு 2024 ஆம் ஆண்டு மார்ச் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியிடப்பட்டது. வயிற்று பிழைப்புக்கு கேரளாவிலிருந்து அரபு நாட்டிற்கு வேலைக்குச் சென்று அங்கு அரேபியர்களிடம் சிக்கிக் கொண்டு ஆடுகளைப் போன்று ஆட்டு கொட்டகைகளில் வாழ்ந்த 2 இளைஞர்களைப் பற்றிய படம் தான் ஆடு ஜீவிதம்.

67
Prithviraj - Aadujeevitham

Prithviraj - Aadujeevitham

இந்த நிலையில் 16 ஆண்டுகள் தவத்திற்கு கிடைத்த பரிசாக இன்று அறிவிக்கப்பட்ட 54ஆவது கேரளா மாநில திரைப்பட விழாவில் ஆடு ஜீவிதம் படம் 9 விருதுகளை குவித்துள்ளது. இதில் சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த படம், சிறந்த காஸ்டியூம் டிசைனர், சிறந்த கலரிஸ்ட், சிறந்த சவுண்ட் அண்ட் மியூசிக் என்று 9 விருதுகளை வென்றது.

77
The Goat Life: Aadujeevitham Movie won 9 Kerala State Film Awards

The Goat Life: Aadujeevitham Movie won 9 Kerala State Film Awards

யார் யாருக்கு விருது அறிவிக்கப்பட்டது:

சிறந்த திரைப்படம் – ஆடு ஜீவிதம்

சிறந்த இயக்குநர் – பிளெஸ்ஸி

சிறந்த நடிகர் – பிருத்விராஜ்

சிறப்பு தேர்வு – கே ஆர் கோகுல்

சிறந்த சவுண்ட் மிக்ஸீங் – ரசூல் பூக் குட்டி, ஷரத் மோகன்

சிறந்த மேக்கப் ஆர்டிஸ்ட் – ரஞ்சித் அம்பாடி

சிறந்த திரைக்கதை – பிளெஸ்ஸி

சிறந்த ஒளிப்பதிவு – சுனில் கே எஸ்

சிறந்த கலரிஸ்ட் – வைஷால் சிவ கணேஷ்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
பிருத்விராஜ் சுகுமாரன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கார்த்திகை தீபம் அப்டேட்: அம்மாவுக்காக கருவை கலைக்கத் துணிந்த ரோகிணி! கார்த்திக்கிடம் சிக்கிய உண்மை - விறுவிறுப்பான எபிசோட்!
Recommended image2
அரிசி வாங்கக் கூட காசு இல்ல; இன்று கோடிகளில் சொத்து! வறுமையை வென்று சாதித்த நடிகர் சிங்கமுத்துவின் வாழ்க்கை கதை!
Recommended image3
அஜித் - விஜய் இருவரும் சேர்ந்து நடித்த 'அந்த' சூப்பர் ஹிட் படங்கள் எவை? இதோ முழு விவரம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved