Asianet News TamilAsianet News Tamil

கட்டண கொள்ளை என விமர்சித்தால் பிரபல நடிகரையே இப்படி செய்வீங்களா?... வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!

கொரோனா பிரச்சனை ஒரு பக்கம், மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் ஏராளமானோர் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். 
 

dmk stalin about prasanna current bill issue
Author
Chennai, First Published Jun 5, 2020, 1:54 PM IST

கொரோனா பிரச்சனை ஒரு பக்கம், மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில், தற்போது ஐந்தாம் கட்டமாக ஜூன் 30ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்தே பணி செய்ய அனுமதி கொடுத்துள்ளனர். இதனால் ஏராளமானோர் வெளியே வரமுடியாமல் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். 

மேலும் செய்திகள்: ஆர்யா மனைவி சாயீஷா கர்ப்பமா? உண்மையை போட்டுடைத்த குடும்பத்தினர்!
 

இந்நிலையில் நடிகர் பிரசன்னா கொரோனா ஊரடங்கு காலத்தில் மின் கட்டணமாக 70 ஆயிரம் ரூபாய் வந்ததற்கு கடுமையாக தன்னுடைய கண்டனத்தை ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து விமர்சித்திருந்தார். 

dmk stalin about prasanna current bill issue

இதுகுறித்து தெரிவித்த நடிகர் பிரசன்னா, என் வீட்டில் மின் கட்டணம் 70 ஆயிரம் ரூபாய் வந்துள்ளது. என் தந்தை மற்றும் எனது மாமனார் வீடுகளுக்கான இந்த கட்டணம் ஐனவரி மாதத்தை விடவும் அதிகமாக உள்ளது. என்னால் இந்த தொகையை கட்ட முடியும், ஆனால் சாதாரண மக்களால் முடியாது என்று தெரிவித்தார். பிரசன்னாவின் இந்த ட்வீட்டிற்கு ஆதரவாக பலர் தங்களுடைய கருத்தை பதிவிட்டு வந்தனர்.

மேலும் செய்திகள்: தளபதி விஜய் குடும்பத்தின் முதல் கார்... எந்த நடிகர் கொடுத்தது உங்களுக்குத் தெரியுமா?
 

இதை தொடர்ந்து, பிரசன்னாவின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த மின்வாரியம் பிரசன்னாவின் கடுமையான விமர்சனத்திற்கு கண்டனமும் தெரிவித்திருந்தது. மேலும் பிரசன்னா மார்ச் மாத மின்கட்டணத்தை கட்டவில்லை என்றும் தெரிவித்திருந்தது.

dmk stalin about prasanna current bill issue

இந்த நிலையில் நடிகர் பிரசன்னா வருத்தம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். மின் வாரியத்தையோ அரசையோ குறை கூறுவது தனது உள்நோக்கமில்லை என்றும் உள்நோக்கமில்லாதபோதும்‌ என்‌ வார்த்தை மின்வாரிய ஊழியர்கள்‌, அதிகாரிகள்‌ மனம்நோகச்‌ செய்திருப்பின்‌ அதற்காக வருந்துகிறேன் என்றும் பிரசன்னா தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: கங்கை அமரனுக்கு தலை சீவி அழகு பார்க்கும் எஸ்.பி.பி ..! பிறந்த நாள் ஸ்பெஷல் புகைப்பட தொகுப்பு!
 

தற்போது இது குறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறுகையில், ‘நடிகர் பிரசன்னா மின் கட்டணம் பற்றி கேள்வி எழுப்பியும், அதற்கு முறையாக பதிலளிப்பதற்குப் பதிலாக இப்படி பழிவாங்கும் விதத்தில், அவரது மின் கட்டணத்தையே ஆய்வு செய்து, அரசியல் ரீதியான அறிக்கையை” ஒரு விளக்கமாகக் கொடுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என தெரிவித்திருந்தார்.

dmk stalin about prasanna current bill issue

மேலும் பொதுமக்களிடம் கூடுதல் மின் கட்டணம் வசூலிப்பது கண்டனத்திற்குரியது என்றும், முந்தைய மாத கட்டணங்களை "பேரிடர் நிவாரணமாக" அறிவித்து மேலும் ஆறு மாதங்களுக்காவது மின் கட்டண சலுகைகளை வழங்கிட வேண்டும் என்றும் முக ஸ்டாலின் மின்வாரியத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios