கொரோனா தொற்று காரணமாக உலகமே பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. இப்படி நெருக்கடியான நேரத்திலும் சும்மா ஜாலியாக புகுந்து விளையாடுவது இயக்குநர் விக்னேஷ் சிவன் தான். கோலிவுட்டே கண் வைக்கும் அளவிற்கு முன்னணி நடிகையான நயன்தாராவுடன் சேர்ந்து செம்மையாக லைப்பை என்ஜாய் செய்து வருகிறார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும், இளம் இயக்குநர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது ஊர் அறிந்த செய்தி. 

இருவரும் எப்போது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று திரைத்துறை மட்டுமல்லாது, ரசிகர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். எங்கு சென்றாலும் காதலன் விக்கியை விட்டு நயன் பிரிவதே இல்லை. வெளிநாடு என்றாலும் சரி, வெளி ஊர் ஷூட்டிங் என்றாலும் சரி இருவரும் ஒன்றாக செல்வதோடு மட்டுமல்லாது, அங்கு எடுக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து முரட்டு சிங்கிள்ஸை வெறுப்பேற்றி வருகின்றனர். போதாக்குறைக்கு தங்கமே, வைரமே என விக்னேஷ் சிவன், நயனை வர்ணித்து பதிவிடும் கவிதைகள் வேற வெலவலுக்கு வைரலாகிறது.  

இதையும் படிங்க: 15 வயதிலேயே பாதை மாறிய தமன்னா... ‘மில்க் பியூட்டி’ கனவில் விழுந்த மண்ணு...!

சமீபத்தில் அன்னையர் தினத்தை முன்னிட்டு இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது சமூக வலைத்தளத்தில் நயன்தாராவிற்கு  அன்னையர் தின வாழ்த்து கூறிய பதிவு வைரலானது. அதில், எனது வருங்கால குழந்தையின் அன்னையான நயன்தாராவுக்கு அன்னையர் தின வாழ்த்துக்கள்’என்று குறிப்பிட என்னாது நயன்தாரா கர்ப்பமாக இருக்காங்களா? என ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர் .

இதையும் படிங்க: உடலோடு ஒட்டி உறவாடும் உடை... அமலா பாலின் கன்றாவி டிரஸை பார்த்து கழுவி ஊத்தும் நெட்டிசன்கள்...!

அன்றைய தினம் நயன் தாராவின் அம்மாவிற்கு மருமகன் விக்னேஷ் சிவன் அன்னையர் தின வாழ்த்து கூறியுள்ளார். நயன்தாராவின் குழந்தை பருவ போட்டோவுடனான அந்த பதிவில் இவ்வளவு அழகான பொண்ண பெத்ததுக்கு நன்றி அம்மா என்று பதிவிட்டிருந்தார். அதற்கு நெட்டிசன் ஒருவர், உங்க அம்மாவிற்கு முதல்ல வாழ்த்து சொல்லு என படுகேவலமான வார்த்தையில் திட்டியுள்ளார். அதைப்பார்த்து கடுப்பாக விக்னேஷ் சிவன் அந்த நெட்டிசனை காண்டாக்கும் விதமாக படு கூலாக பதிலளித்துள்ளார். 

இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் விஜய் சேதுபதி விவகாரம்... மக்கள் செல்வனை கதறவிடும் இந்து அமைப்புகள்...!

அதில், உங்க அம்மாவிற்கும் அன்னையர் தின வாழ்த்துக்கள் :)... உங்களைப் போன்ற நன்னடத்தை, கனிவான குணம் கொண்ட நல்ல மனிதரை பெற்றதற்காக வாழ்த்துகிறேன் என்று கமெண்ட் செய்துள்ளார். மிக மோசமான கமெண்டிற்கு கூட எவ்வித கோபமும், பதற்றமும் இல்லாமல் தன்னை விமர்சித்தவரே தலை குனியும் அளவிற்கு பதிலளித்துள்ளார் விக்னேஷ் சிவன்.