’ரஜினி கமல் கூட்டணி பத்தி என்கிட்ட கேள்வி கேக்காதீங்க’...அடம் பிடித்த டி.ராஜேந்தர்...

என்.எஸ்.சி எனப்படும் சென்னை,செங்கல்பட்டு,சவுத் ஆற்காடு பகுதிகளுக்கான விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர்,’ரஜினி, கமல் அரசியல் கூட்டு பத்தி கேள்வி கேட்டா அதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்’என்று அடம்பிடித்து அதற்கு ஒரு காரணமும் சொன்னார்.
 

director t.rajendar press meet

என்.எஸ்.சி எனப்படும் சென்னை,செங்கல்பட்டு,சவுத் ஆற்காடு பகுதிகளுக்கான விநியோகஸ்தர் சங்கத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்த டி.ராஜேந்தர்,’ரஜினி, கமல் அரசியல் கூட்டு பத்தி கேள்வி கேட்டா அதுக்கு நான் பதில் சொல்ல மாட்டேன்’என்று அடம்பிடித்து அதற்கு ஒரு காரணமும் சொன்னார்.director t.rajendar press meet

இயக்குநரும்  நடிகருமான டி. ராஜேந்தர் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர்,’சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய இடங்களில் வினியோகஸ்தர்கள் சங்க தேர்தல் டிசம்பர் 22ம் தேதி நடைபெறுகிறது.  இதில் மாற்றம்  ஏற்படவேண்டும் என்ற எண்ணத்தில், வினியோகஸ்தர்கள் வற்புறுத்தலின் பேரில் நான்  போட்டியிடவுள்ளேன். மன்னன் பிலிம்ஸ் மன்னன்  செயலாளர் பதவிக்கு போட்டியிடுகிறார். சினிமா நலிஞ்சுட்டு இருக்கு. அத தூக்கி நிறுத்தணும்,  அதுக்காக போராடனும். அதுக்காக நான் போட்டியிடவுள்ளேன்’என்றார்.

அதை தொடர்ந்து ரஜினி கமல் இணைந்து அரசியலில்  பயணிப்பது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன? அவங்களுக்கு முன்னாடி அரசியலுக்கு வந்த உங்களாலேயே  அரசியலில் நிலைக்க முடியலையே  என்ற செய்தியாளரின் கேள்விக்கு, கடுப்பான டி. ராஜேந்தர்,  யூ டூ ப்ரூட்டஸ்ன்னு சொல்லுற மாதிரி நான் அரசியலில் நிலைக்கலன்னு  சொல்லி என் ரத்தத்தை  சூடாக்கி அதுல டிஆர்பி ஏத்தலாம்னு பார்க்குறீங்களா? டிஆர்பி-குள்ளேயே  இருக்குறவன்  தான் இந்த டிஆர். நான் தான் அடுத்த முதல்வர்னு எப்பவுமே சொன்னது இல்லை. நான் ஆட்சியை பிடிக்க அரசியலுக்கு வரல. ஆட்சியில இருக்குறவங்கள பிடிபிடின்னு புடிக்கத்தான்  அரசியலுக்கு வந்தேன்.director t.rajendar press meet

ரஜினியும் கமலும்  எனக்கு முன்னாடியே சினிமாவுக்கு வந்தவங்க. நான் ரெண்டு பேருக்குமே ரசிகன். நான் அரசியலில் வேண்டுமானால் அவங்கள விட கொஞ்சம் சீனியரா இருக்கலாம். கஷ்டப்பட்டு வந்தேன் என்ன நீங்க அரசியலில் நிலைக்கலன்னு சொல்லுறீங்க..எனக்கு வருத்தம் இல்லை. ரஜினி சார் வீட்டுக்கு மகன்  திருமண பத்திரிகை வைக்க போனேன். என்ன மரியாதை.. வாசல் வரைக்கும் வந்து வழியனுப்புறார். அதனால எனக்கு ரஜினி கமல் ரெண்டு பேருமே சீனியர்கள். அவங்க எடுக்குற முடிவு பற்றி என்கிட்ட  கேட்காதீங்க..அப்புறம் நான்  சொல்ல வந்த நியூஸை  விட்டுவிட்டு அதை ஹைலைட் பண்ணிடுவீங்க’என்று உஷாராகப் பதில் அளித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios