பாகுபலி சாதனையை முறியடித்த தி ராஜா சாப்... முதல் நாளே இத்தனை கோடி வசூலை வாரிசுருட்டியதா?
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் நடிப்பில் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்துள்ள தி ராஜா சாப் திரைப்படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

The Raja Saab Movie Day 1 Box Office
பிரபாஸ் இரண்டு வருட இடைவெளிக்கு பிறகு 'தி ராஜா சாப்' படத்துடன் ரீ-எண்ட்ரி கொடுத்துள்ளார். பேண்டஸி ஹாரர் காமெடியாக மாருதி இயக்கியுள்ள இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நிதி அகர்வால், மாளவிகா மோகனன் ஆகியோர் நடித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸ் ஆன இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்துள்ளன. இதனால் இப்படத்தின் வசூல் பாதிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி ராஜா சாப் திரைப்படம் முதல் நாளே வசூலில் செஞ்சுரி அடித்து மாஸ் காட்டி உள்ளது. அதன் வசூல் நிலவரத்தை பார்க்கலாம்.
தி ராஜா சாப் முதல் நாள் வசூல்
ராஜா சாப் திரைப்படம் முதல் நாள் இந்தியாவில் மட்டும் ரூ.62.5 கோடி வசூலை வாரிசுருட்டி இருக்கிறது. இதுதவிர வெளிநாடுகளில் 30 கோடி வசூலித்துள்ள இப்படம், ப்ரீமியர் காட்சியின் வாயிலாக ரூ.13 கோடி வசூலித்து உள்ளது. இதன் மூலம் ப்ரீமியர் காட்சி உள்பட அனைத்தையும் சேர்த்து தி ராஜா சாப் திரைப்படம் முதல் நாளில் ரூ.105.5 கோடி வசூலித்து இருக்கிறது. கடைசியாக வெளிவந்த பிரபாஸ் படங்களைக் காட்டிலும் இது குறைவான வசூலாகவே பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தெலுங்கு வெர்ஷன் மட்டும் ரூ.45.5 கோடி வசூலித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் அதிக வசூல் அள்ளிய பிரபாஸ் படங்கள்
பிரபாஸ் படங்களில் அதிக முதல் நாள் வசூல் செய்த படங்களில் 'பாகுபலி 2' முதலிடத்தில் உள்ளது. ராஜமௌலி இயக்கிய இப்படம் உலகளவில் முதல் நாளில் ரூ.214 கோடி வசூலித்தது. இரண்டாவது இடத்தில் 'கல்கி 2898 ஏடி' உள்ளது. நாக் அஸ்வின் இயக்கிய இந்த சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம், முதல் நாளில் உலகளவில் ரூ.182 கோடி வசூலித்தது. மூன்றாவது இடத்தில் 'சலார்' உள்ளது. பிரசாந்த் நீல் இயக்கிய இந்த அதிரடித் திரைப்படம், முதல் நாளில் உலகளவில் ரூ.165 கோடியை வசூலித்தது. அடுத்ததாக 'ஆதிபுருஷ்' உள்ளது. ஓம் ராவத் இயக்கிய இப்படம், நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தபோதிலும் முதல் நாளில் ரூ.136 கோடி வசூலித்தது.
பாகுபலியை முந்திய தி ராஜா சாப்
பிரபாஸின் அதிக ஓப்பனிங் படங்களில் 'சாஹோ'வும் உள்ளது. 'பாகுபலி'க்குப் பிறகு வெளியானதால், இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ.125 கோடியை வசூலித்தது. பான் இந்தியா படமான 'பாகுபலி' முதல் பாகம் இதற்கு முன்னர் வரை ஆறாவது இடத்தில் இருந்த நிலையில் தற்போது தி ராஜா சாப் திரைப்படம் அதை முறியடித்து உள்ளது. பாகுபலி பார்ட் 1 முதல் நாளில் ரூ.73 கோடி வசூலித்தது. அதை ராஜா சாப் படம் முந்தி உள்ளது. இதன்மூலம் முதல் நாளில் 100 கோடி வசூல் அள்ளிய ஆறாவது படமாக இது மாறி இருக்கிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

