MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கருத்து
  • தி ராஜா சாப் விமர்சனம் : பிரபாஸின் பொங்கல் விருந்து டேஸ்டாக இருந்ததா?

தி ராஜா சாப் விமர்சனம் : பிரபாஸின் பொங்கல் விருந்து டேஸ்டாக இருந்ததா?

மாருதி இயக்கத்தில் பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள தி ராஜா சாப் திரைப்படத்தின் விமர்சனம் இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

4 Min read
Author : Ganesh A
Published : Jan 09 2026, 10:05 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
The Raja Saab Movie Review
Image Credit : X

The Raja Saab Movie Review

பான்-இந்தியா ஸ்டார் பிரபாஸ், 'சலார்' மற்றும் 'கல்கி 2898 ஏடி' மூலம் அடுத்தடுத்து வெற்றிகளைப் பெற்றார். தொடர்ச்சியாக ஆக்சன் படங்களில் நடித்து வந்த நிலையில், தற்போது தனது ஜானரை மாற்றியுள்ளார். ஒரு நல்ல காமெடி என்டர்டெய்னர் செய்ய வேண்டும் என்று கூறி, இப்போது 'தி ராஜாசாப்' படத்தை தேர்வு செய்துள்ளார். பிரபாஸ் ஆக்சன் படங்களில் கவர்ந்தாலும், அவர் ஒரு திகில் படத்தில் நடிப்பது இதுவே முதன்முறை என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருந்தது. பேண்டஸி ஹாரர் காமெடியாக இதை உருவாக்கியுள்ளார் இயக்குனர் மாருதி. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். பீப்பிள்ஸ் மீடியா பேக்டரி சார்பில் டி.ஜி. விஸ்வ பிரசாத் தயாரித்துள்ளார். இதன் விமர்சனத்தை பார்க்கலாம்.

26
தி ராஜா சாப் படத்தின் கதை
Image Credit : Asianet News

தி ராஜா சாப் படத்தின் கதை

ராஜுவுக்கு (பிரபாஸ்) தாய், தந்தை இல்லை. தனது பாட்டி கங்கவ்வாவை (ஜரீனா வஹாப்) உயிராகக் கொண்டு வாழ்கிறான். பாட்டிக்கு அவன், அவனுக்கு பாட்டி என எல்லாம் அவர்களே. இவர்களுக்கு அனிதா (ரித்தி குமார்) ஆதரவளிக்கிறாள். ஆனால், பாட்டி பல ஆண்டுகளாக தனது கணவர் கனகராஜுவுக்காக (சஞ்சய் தத்) காத்திருக்கிறார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தனது செல்வத்தைக் கொள்ளையடித்துச் சென்ற கங்கராஜுவைப் (சமுத்திரக்கனி) பிடிக்கச் செல்கிறார். மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால், கணவருக்காக அவள் ஏங்குகிறாள். எப்போதும் அவரைப் பற்றியே சிந்தித்து மறதியையும் வரவழைத்துக் கொள்கிறாள். தாத்தாவைத் தேடிக் கொண்டு வருமாறு பேரன் ராஜுவிடம் கேட்கிறாள். ஹைதராபாத்தில் கனகராஜு இருப்பதாகத் தெரிந்து, ராஜு தேடச் சென்று போலீசாரை நாடுகிறான். அங்கே கிறிஸ்டியன் பெண் பிரெஸ்ஸியை (நிதி அகர்வால்) பார்த்து மயங்குகிறான்.

சர்ச்சில் ஒரு குழந்தையின் இதய அறுவை சிகிச்சைக்காக மூன்று லட்சம் கொடுக்கிறான். ஆனால், அந்தப் பணத்தை கனகராஜு திருடிவிட்டதாக பிரெஸ்ஸி போலீசில் புகார் செய்கிறாள். அதே நேரத்தில், கங்கராஜுவின் பேத்தி பைரவி (மாளவிகா மோகனன்) சூட்கேஸில் நிறைய பணத்துடன் நுழைகிறாள். இவர்கள் அனைவரும் சேர்ந்து தேட, அவர் நரசாப்பூர் காட்டில் ஒரு கோட்டையில் இருப்பதாக கங்கராஜு மூலம் தெரிகிறது. தனது போலீஸ் மாமா (விடிவி கணேஷ்), நண்பன் பிரபாஸ் ஸ்ரீனு, பைரவியை அழைத்துக்கொண்டு அந்தக் கோட்டைக்குள் செல்கிறார்கள். அங்கே ராஜு தனது தாத்தாவைச் சந்தித்தானா? தனது பாட்டியின் ஆசையை நிறைவேற்றினானா? அந்தக் கோட்டையில் என்ன அனுபவங்கள் ஏற்பட்டன? அதில் உள்ள பேய் யார்? கனகராஜுவுக்கு பணம் மீது ஏன் அவ்வளவு ஆசை? அவனுக்குப் பின்னால் உள்ள கதை என்ன? தேவநகரி சாம்ராஜ்யத்தின் ஜமீன்தாரிணி கங்காதேவியின் கதை என்ன? அவள் கங்கவ்வாவாக எப்படி மாறினாள்? தேவநகரி சாம்ராஜ்யத்தின் செல்வத்தை எல்லாம் திருடியது யார்? இதற்கும் கங்கராஜுவுக்கும் என்ன சம்பந்தம்? போன்ற பல கேள்விகளுக்கு விடை அளிப்பது தான் இந்த ராஜா சாப்.

Related Articles

Related image1
Raja Saab : பிரபாஸின் பேய் படம்... ராஜா சாப் டீசர் எப்படி இருக்கு? - வீடியோ இதோ
Related image2
பிரபாஸின் ராஜா சாப் படக்குழு வெளியிட்ட டபுள் தமாக்கா அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்
36
தி ராஜா சாப் விமர்சனம்
Image Credit : Asianet News

தி ராஜா சாப் விமர்சனம்

முதல் பாதியில் காமெடி பெரிதாக வேலை செய்யவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் ஓரளவு சிரிக்க வைக்கிறது, திருப்தி அளிக்கிறது. சைக்கலாஜிக்கல் அம்சங்களை கையாளும் விதம் நன்றாக உள்ளது. அவை புதுமையாகவும், மனதை தூண்டும் வகையிலும் அமைந்துள்ளன. பார்வையாளரின் சிந்தனைக்கு வேலை கொடுக்கும் காட்சிகள் இடம்பெறுகின்றன. கிளைமாக்ஸ் பகுதியை சிறப்பாக கையாண்டுள்ளனர். அது வேறொரு லெவல் என்ற உணர்வை தருகிறது. மொத்தமாக கிளைமாக்ஸில் நல்ல பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர். அதேசமயம், பாகம் 2-க்கு வழி வகுக்கும் விதமாக கதையை முடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது, படத்தின் முதல் பாதி சற்று மெதுவாக இருப்பதாக தோன்றுகிறது. இரண்டாம் பாதியில் அந்த குறையை ஓரளவு ஈடு செய்துள்ளனர். ஆனால் பல இடங்களில் காமெடி காட்சிகள் வெறுமனே போய்விடுகின்றன. முதல் பாதியில் அவை ஒன்றுமே வேலை செய்யவில்லை. லாஜிக் இல்லாத காட்சிகள் அதிகமாக உள்ளன. கதை பல இடங்களில் ஒரே இடத்திலேயே சுற்றிக்கொண்டிருப்பது போல உணரப்படுகிறது; முன்னே நகர்வதில்லை. அதேபோல் காதல் எபிசோடுகளும் பார்வையாளருடன் சரியாக கனெக்ட் ஆகவில்லை. இரண்டாம் பாதியில் ஓரளவு காமெடி மற்றும் கிளைமாக்ஸ் மட்டுமே படத்தின் முக்கிய பலமாக சொல்லலாம்.

46
பர்பார்மன்ஸ் எப்படி உள்ளது?
Image Credit : Asianet News

பர்பார்மன்ஸ் எப்படி உள்ளது?

ராஜா கதாபாத்திரத்தில் பிரபாஸ் மிரட்டலாக நடித்துள்ளார். புதிய லுக்கில் கவர்ந்துள்ளார். ஜாலியான தோற்றத்தில் வந்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளார். அவருக்கு இது ஒரு நல்ல சேஞ்ச்ஓவர் என சொல்லலாம். நடனங்களிலும் பிரபாஸ் அசத்தியுள்ளார். மூன்று கதாநாயகிகளும் கிளாமரால் ரசிகர்களை கவர்ந்துள்ளனர். பைரவியாக மாளவிகா, பிளெஸ்ஸியாக நிதி, அனிதாவாக ரித்தி ஆகியோர் தங்களுக்கான வேடங்களில் சிறப்பாக நடித்துள்ளனர். கிளாமர் விஷயத்தில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

சத்யாவின் காமெடி சிரிக்க வைக்கிறது. விடிவி கணேஷ், பிரபாஸ் ஸ்ரீனு ஆகியோரும் போட்டி போட்டு சிரிக்க வைக்க முயற்சித்துள்ளனர். சப்தகிரி குறுகிய நேரமே வந்தாலும் ஓரளவு கவர்ந்துள்ளார். கங்கராஜுவாக சமுத்திரக்கனி சிறிது நேரம் வந்தாலும் தன் பங்கைச் சரியாக செய்துள்ளார். பாட்டி கதாபாத்திரத்தில் ஜரீனா வஹாப் சிறப்பாக நடித்துள்ளார்; கதாபாத்திரத்தில் முழுமையாக வாழ்ந்துள்ளார். கனகராஜுவாக சஞ்சய் தத் விஸ்வரூபம் காட்டியுள்ளார். சட்டிலான நடிப்பால் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியுள்ளார். இருப்பினும், அனைவரையும் டாமினேட் செய்தவர் பிரபாஸ்தான் என்று கூறலாம்.

56
தி ராஜா சாப் ரிவ்யூ
Image Credit : The Raja Saab\PeopleMediaFactory

தி ராஜா சாப் ரிவ்யூ

இந்தப் படத்திற்கு இசை ஒரு பெரிய பலம். பாடல்கள் ஓரளவு பரவாயில்லை என்றாலும், மனதில் நிலைக்கவில்லை. ஆனால் பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. அது படத்தின் முதுகெலும்பாக செயல்படுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸில் வரும் பின்னணி இசை “வாவ்” சொல்ல வைக்கிறது. கார்த்திக் பழனியின் ஒளிப்பதிவு நன்றாக உள்ளது. விஎஃப்எக்ஸ் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. தொடக்கம் முதல் முடிவு வரை கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளது. ஆனால் கோட்டகிரி வெங்கடேஸ்வர ராவின் எடிட்டிங் பல இடங்களில் தளர்வாக உள்ளது. இன்னும் சற்று டிரிம் செய்திருக்க வேண்டும்.

கலை இயக்கம் படத்தின் முக்கிய ஹைலைட். இயக்குநர் மாருதி தேர்ந்தெடுத்த கதை நல்லதாக உள்ளது. புதிய விஷயத்தை சொல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அதை முழுமையாக ஈர்க்கும் வகையில் திரையில் கொண்டு வருவதில் ஓரளவுக்கே வெற்றி பெற்றுள்ளார். விஷுவல் கிராண்டியரை அழகாக காட்டியுள்ளார். ஆனால் திரைக்கதையில் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும். அதை மேலும் கிரிஸ்பாக எழுதியிருக்கலாம். காமெடி விஷயத்தில் இன்னும் அதிகமாக உழைத்திருக்க வேண்டும். பிரபாஸ் கதாபாத்திரத்தை நன்றாக வடிவமைத்து, அழகாக காட்டியுள்ளார். இரண்டாம் பாதியில் காமெடி ஓரளவு வேலை செய்தாலும், முதல் பாதியில் அந்த குறை தெளிவாக தெரிகிறது. கிளைமாக்ஸை இன்னும் அர்த்தமுள்ளதாகவும், கூஸ்‌பம்ஸ் வரும்வகையிலும் செய்திருந்தால் படம் இன்னும் பெரிய ஹிட்டாக மாறியிருக்கும்.

66
பிளஸ், மைனஸ் என்ன?
Image Credit : Asianet News

பிளஸ், மைனஸ் என்ன?

பிளஸ்

படத்தில் பிரபாஸின் புதிய லுக், அவரது காமெடி, ரொமான்ஸ், மூன்று கதாநாயகிகளுக்கு இடையில் அவர் சிக்கிக் கொள்வது போன்ற காட்சிகள் ரசிக்கும்படியாக உள்ளன. நடனங்களிலும் அவர் சிறப்பாக செய்துள்ளார். பின்னணி இசை மிரட்டலாக உள்ளது. விஷுவல்ஸ் கண்களை கவர்கின்றன. விஎஃப்எக்ஸ் தரமாக உள்ளது. நடிகர்கள் அனைவரும் தங்களுக்கான வேடங்களை நன்றாக செய்துள்ளனர். திகில் எபிசோடுகள், சைக்கலாஜிக்கல் அம்சங்கள் பரவாயில்லை. இடைவேளை பகுதி, இரண்டாம் பாதியில் ஓரளவு காமெடி மற்றும் கிளைமாக்ஸ் ஆகியவை படத்தின் பிளஸ் பாயிண்ட்களாக சொல்லலாம்.

மைனஸ்

படத்தின் முதல் பாதி, தேவையற்ற நீளமான காட்சிகள், பெரும்பாலான காமெடி காட்சிகள் வேலை செய்யாதது, அதிலும் பல காட்சிகள் வழக்கமானவை, கட்டாயமாக திணிக்கப்பட்ட காதல் ட்ராக்குகள், எடிட்டிங், திரைக்கதை, சாதாரண வசனங்கள் ஆகியவை படத்தின் முக்கிய மைனஸ்களாக உள்ளன. இதற்கு மேலாக படத்தின் நீளமும் ஒரு குறையாகவே தெரிகிறது. மொத்தத்தில், பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ படம் சிரிப்பையும், பயத்தையும் ஓரளவுக்கே கடத்துகிறது.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரபாஸ்
விமர்சனம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
கிச்சா சுதீப்பின் ‘மார்க்’ பாஸ் ஆனதா? ஃபெயில் ஆனதா? விமர்சனம் இதோ
Recommended image2
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ
Recommended image3
அருண் விஜய்யின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? வேஸ்டா? ‘ரெட்ட தல’ விமர்சனம்
Related Stories
Recommended image1
Raja Saab : பிரபாஸின் பேய் படம்... ராஜா சாப் டீசர் எப்படி இருக்கு? - வீடியோ இதோ
Recommended image2
பிரபாஸின் ராஜா சாப் படக்குழு வெளியிட்ட டபுள் தமாக்கா அப்டேட்! உற்சாகத்தில் ரசிகர்கள்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved