Anantha Movie Official Teaser Released " ரஜினிகாந்த், கமல் ஹாசன் படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவான அனந்தா படத்தின் டீசர் வெளியாகியிருக்கிறது.

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா - அனந்தா

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் படம் தான் அனந்தா. இதற்கு முன்னதாக சுரேஷ் கிருஷ்ணா, சத்யா, ராஜா கைய வெச்சா, அண்ணாமலை, வீரா, பாட்ஷா, ஒருவன், சங்கமம், ஆளவந்தான் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார்.

தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு அனந்தா படத்தை இயக்கியிருக்கிறார். இந்தப் படம் விரைவில் திரைக்கு வரும் நிலையில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் இசை வெளியிடப்பட்டுள்ளது. டீசரைப் பொறுத்த வரையில் படத்தில் நடித்த யாரும் டயலாக் பேசவில்லை. வெறும் மியூசிக்கை மட்டுமே வைத்து டீசர் முழுவதும் வெளியாகியிருக்கிறது. கிட்டத்தட்ட படத்தை பார் கதை என்பது போன்று இந்த டீசர் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.

உண்மையை தெரிந்து கொண்ட தீபாவதி – கார்த்திக்கிற்கு ஷாக் கொடுக்கும் சாமுண்டீஸ்வரி!

இந்தப் படம் மும்பை, கேரளா, கொல்கத்தா, சென்னை ஆகிய பகுதிகளில் நடப்பது போன்று சித்தரிக்கப்பட்டுள்ளது. படத்தில் ஜெகபதி பாபு, சுஹாசினி, ஒய் ஜி மகேந்திரன், அபிராமி வெங்கடாச்சலம், தலைவாசல் விஜய் ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் இடம் பெற்ற பாடல்களை மனோ, சின்மயி, காயத்ரி மற்றும் குணல் ஆகியோர் பாடியுள்ளனர்.பேன் இந்தியா படமாக இந்தப் படம் விரைவில் திரைக்கு வருகிறது.

ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்ட படம் தான் அனந்தா – சுரேஷ் கிருஷ்ணா!