MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்ட படம் தான் அனந்தா – சுரேஷ் கிருஷ்ணா!

ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்ட படம் தான் அனந்தா – சுரேஷ் கிருஷ்ணா!

Anantha Teaser and Audio Launch : அனந்தா படத்தின் கதை ஒரு மணி நேரத்தில் எழுதி முடிக்கப்பட்டது என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Nov 12 2025, 07:11 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
Image Credit : SRI SATHYA SAI

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியிருக்கும் அனந்தா படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள மியூசிக் அகாடமியில் நடைபெற்றது. இதில், இசையமைப்பாளர் தேவா, நடிகை சுகாசினி, பாடலாசிரியர் பா விஜய், பிக்பாஸ் அபிராமி, தலைவாசல் விஜய், பின்னணி பாடகர் மனோ, ஒய் ஜி மகேந்திரன், கலைப்புலி எஸ் தாணு, நிழல்கள் ரவி ஆகியோர் உள்பட ஏராளமான பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
அனந்தா டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா
Image Credit : SRI SATHYA SAI

அனந்தா டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா

ரஜினிகாந்தை வைத்து பாட்ஷா, அண்ணாமலை, வீரா, பாபா போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா நீண்ட இடைவெளிக்குப் பிறகு இப்போது அனந்தா என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு இளைஞன் என்ற தமிழ் படத்தை கடைசியாக இயக்கியிருந்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் பல படங்களை இயக்கியுள்ளார். உதவி இயக்குநராக பல படங்களில் பணியாற்றியுள்ளார்.

34
அனந்தா படத்தின் இசை வெளியீட்டு விழா
Image Credit : SRI SATHYA SAI

அனந்தா படத்தின் இசை வெளியீட்டு விழா

இந்த நிலையில் தான் டீசர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா கூறியிருப்பதாவது: அனந்தா படம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக சாய் பாபா என்னுடைய கனவில் தோன்றினார் என்றார். மேலும், இந்தப் படம் புட்டபர்த்தி பாபாவின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது. நான் கடந்த 2009 ஆம் ஆண்டு புட்டபர்த்தி பாபா கோயிலுக்கு சென்றேன். அப்போது தான் நான் முதல் முதலாக அந்த கோயிலுக்கு சென்றிருந்தேன். ஆனால், பாபா என்னைப் பார்த்து இத்தனை நாட்களாக எங்கு இருந்தாய் என்று கேட்டார். எனக்கு அந்த ஒரு நிமிடம் நம்பமுடியவில்லை. பிறகு நான் என்னுடைய வேலைகளை பார்க்க மீண்டும் ஒரு நாள் பாபா கனவில் தோன்றினார்.

44
இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா
Image Credit : SRI SATHYA SAI

இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா

சாய் பாபா கனவில் தோன்றியது குறித்து நான் என்னுடைய நண்பரிடம் கூறினேன். ஆனால், அவர் ஒரு அதிர்ச்சி செய்தியை என்னிடம் கூறினார். அவர் நேற்று தான் நாங்கள் சாய் பாபாவின் வாழ்க்கை வரலாறு படம் எடுப்பது குறித்து பேசிக் கொண்டிருந்தோம் என்றார். இதையெல்லாம் கேட்கும் போது எனக்கு சாய் பாபா இருக்கிறார். எப்போதும் என்னை சுற்றியே என்னை அவர் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று எனக்கு எண்ணம் தோன்றுகிறது.

அதன் பிறகு தான் அனந்தா படத்திற்கான கதையை எழுதினேன். அதுவும் ஒரு மணி நேரத்திற்குள்ளாகவே நான் அந்தக் கதையை எழுதி முடித்துவிட்டேன் என்றார். இதற்கு முழு காரணமும் சாய் பாபா தான் என்றார். அனந்தா படத்தில் சுகாசினி, ஒய்.ஜி மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் தேவா இசையமைத்துள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சினிமா காட்சியகம்
சினிமா
திரைப்படம்
திரைப்பட விமர்சனம்
 
1st ODI • NZ vs IND 2026
Result
NZNZ
185
INDIND
143/5
IND beat NZ by 5 wickets (D/L) method
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th ODI • NZ vs IND 2026
NZNZ
Sun, 15 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Jailer 2 OTT Release : ஓடிடிக்கு பார்சல் செய்யப்பட்ட ஜெயிலர் 2... 1000 கோடி வசூலுக்கு வாய்ப்பில்ல ராஜானு செக் வைத்த அமேசான் பிரைம்...!
Recommended image2
Ramayana Movie Review: ராமாயணா படம் ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முழு விமர்சனம் இதோ
Recommended image3
Ramayana X Review: ராவணனாக மிரட்டிய யஷ்... நித்திஷ் திவாரியின் பிரமாண்ட 'ராமாயணா: பார்ட் 1' படம் எப்படி இருக்கு? பிளஸ் & மைனஸ் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved