Asianet News TamilAsianet News Tamil

சாவர்க்கர் தொடர்பான கருத்து; உண்மை தன்மையை அறியாமல் பேசியது தவறு தான் சுதா கொங்குரா விளக்கம்

சாவர்க்கர் குறித்து இயக்குநர் சுதா கொங்குரா தெரிவித்த கருத்துக்கு இணையத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

director sudha kongara give explanation to his comments about savarkar vel
Author
First Published Jul 27, 2024, 7:24 PM IST | Last Updated Jul 27, 2024, 7:24 PM IST

பிரபல திரைப்பட இயக்குநர் சுதா கொங்குரா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், “நான் வராற்று மாணவி. எனக்கு பாடம் எடுத்த ஆசிரியர் ஒருவர் சாவர்க்கர் கதையை சொன்னார். அதாவது சாவர்க்கர் ஒரு பெரிய தலைவர், அனைவராலும் மதிக்கப்பட்டவர். திருமணத்திற்கு பின்னர் அவரது மனைவி வீட்டில் இருக்க விருப்பம் தெரிவித்த நிலையில் படிக்கச் சொல்லி வற்புறுத்தி உள்ளார். அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்துச் சென்று படிக்கச் செய்தார். இது சரியா, தப்பா என அங்கிருந்து என்னுடைய கேள்விகள் எழுந்தன என்று கூறி இருந்தார்.

இந்த கருத்து சமூக வலைளங்களில் வைரலான நிலையில், சுதா கொங்குராவுக்கு எதிராக இணையவாசிகள் பலரும் இது தொடர்பாக நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் சாவர்க்கர் தொடர்பான தனது பேட்டி குறித்து சுதா கொங்குரா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “என் தவறுக்கு வருந்துகிறேன். 

Meena & L Murugan | மத்திய அமைச்சர் எல் முருகன் வீட்டு விழாவில் நடிகை மீனா எதற்கு? காரணம் என்ன?

எனது பதினேழாவது வயதில் பெண் கல்வி குறித்த எனது வகுப்பு ஒன்றில் எனது ஆசிரியர் சொன்னதை வைத்து நான் அந்த நேர்முகத்தில் பேசியிருந்தேன். ஒரு வரலாற்று மாணவியாக அதன் உண்மைத் தன்மையை நான் சோதித்திருக்க வேண்டும். அது என் பக்கத்தில் தவறுதான். எதிர்காலத்தில் அப்படி நேராது என்று உறுதியளிக்கிறேன். மற்றபடி ஒருவருடைய உன்னதமான செயலுக்கான புகழை இன்னொருவருக்குத் தர வேண்டும் என்ற நோக்கம் எனக்கு இல்லை. எனது பேச்சில் இருந்த தகவல் பிழையை சுட்டிக் காட்டியவர்களுக்கு நன்றி. ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் புலே ஆகியோருக்கு என்றும் தலை வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios