Meena & L Murugan | மத்திய அமைச்சர் எல் முருகன் வீட்டு விழாவில் நடிகை மீனா எதற்கு? காரணம் என்ன?
மத்திய அமைச்சர் முருகன் வீட்டு பொங்கல் விழாவில் நடிகை மீனா பங்கேற்ற சம்பவம் வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. இதற்கு நடிகை மீனா விளக்கம் அளிப்பாரா? அல்லது சட்டப்பூர்வ நடவடிக்கையை மேற்கொள்வாரா? அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் மீனா!
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாக கோலிவுட் சினிமாவின் கனவுக்கன்னியாக இருந்தவர் நடிகை மீனா, பின்னர் இசையமைப்பாளர் வித்யாசாகரை மணந்துகொண்டார். கொரோனா காலத்தில் வித்யாசாகர் இறந்ததைத் தொடர்ந்து நடிகை மீனா பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.
இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப்போவதாக பல நடிகர்களுடன் சேர்த்து வைத்து கிசுகிசுக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது பாஜக மத்திய அமைச்சர் எல்.முருகனுடன் உறவில் இருப்பதாக வதந்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.
ஏனெனில், அண்மையில் பாஜகவின் மத்திய அமைச்சர் எல் முருகன் தலைமையில் நடந்த பொங்கல் விழாவில் நடிகை மீனாவும் கலந்துகொண்டிருந்தார். பிரதமர் மோடியும் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். இதில் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றது. நடிகை மீனாவுடன், டான்ஸ் மாஸ்டர் கலாவும் கலந்துகொண்டிருந்தார்.
AVM மியூசியம் - தன் மனதிற்கு நெருக்கமான "பல்லக்கு" - சந்தோஷத்தில் மூழ்கிய மீனா!
தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவரான குஷ்பு இல்லாத இந்த பாஜக நிகழ்ச்சியில், நடிகை மீனாவுக்கு அதிகளவு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தது. இதையே சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒருவேளை குஷ்புவை கழற்றிவிட்டு நடிகை மீனாவை பாஜகவில் சேர்க்கும் முயற்சியா அல்லது வேறு ஏதாவது இருக்குமோ என்றும் விவாதித்து வருகின்றனர்.
இசையோடு நடைபோடும் மாதேஷ்.. அவரே கொடுத்த "இளையராஜா" அப்டேட்!
இதற்கு, நடிகை மீனா ஒருவரே தகுந்த பதில் தரவேண்டும். அவரே முன் வந்து தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். அந்த விழாவிற்கு ஏன் சென்றேன். எப்படி அழைப்பு வந்தது. எந்த நோக்கத்திற்காக சென்றேன் என்பதை அவரே விளக்க வேண்டும். அவ்வாறு இல்லாத பட்சத்தில் வதந்திகள் குறித்த நடிகை மீனா சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டும் செய்யாமல் அமைதியாய் இருப்பது வதந்தியை உண்மையாக்குவது போல் இருக்கக்கூடாது.