தெலுங்கு திரையுலகின் பிரம்மாண்ட இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் 2017ம் ஆண்டு வெளியான திரைப்படம் பாகுபலி 2 . இதன் முதல் பாகம் வெளியாகி சரமாரியான சாதனைகளை முறியடித்த நிலையில், இரண்டாம் பாகம் அதே விறுவிறுப்போடு தயாரானது. பிரபாஸ், தமன்னா, ராணா டகுபதி, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்த இந்த படம் இந்திய சினிமாவையும் கடந்து உலக அளவில் ஏராளமான சாதனைகளை படைத்தது. உலக அளவிலான பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ஆயிரத்து 810 கோடி வரை வசூல் செய்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. 

இதையும் படிங்க: “வன்னியர் வளர்ந்தா வயிறு எரியுதாடா?”.... தன்னை விமர்சித்த நெட்டிசனை தாறுமாறாக கிழித்த திரெளபதி இயக்குநர்....!

ராஜமெளலியின் பாகுபலி படத்தின் 2 பாகங்களிலும் கடவுள் நம்பிக்கை குறித்த பல சீன்கள் இடம் பெற்றிருக்கும். பிரபாஸ் லிங்கத்தை தூக்கி கொண்டு நடப்பது முதல் இறுதியாக கோவிலை சுற்றி அனுஷ்கா தீச்சட்டி சுமந்து நடப்பது வரை கடவுள் நம்பிக்கைக்கு பலம் கூட்டும் பல காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இதேபோல் ராம்சரண் நடித்த மகதீரா படத்திலும் சிவன் வழிபாட்டை பறைசாற்றும் விதமாக காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். முன் ஜென்மம், மறு பிறப்பு ஆகிய விஷயங்களை அடிப்படையாக கொண்டும் படங்களை இயக்கியுள்ளார். அப்படிப்பட்ட இயக்குநர் ராஜமெளலி தனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது என கூறியுள்ளார் என்றால் நம்ப முடிகிறதா?. 

இதையும் படிங்க: சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டியா இது?... இளம் வயதிலேயே கவர்ச்சியில் ஓவர் தாராளம் காட்டிய போட்டோ....!

சமீபத்தில் பேட்டி ஒன்றிற்கு பதிலளித்த எஸ்.எஸ்.ராஜமெளலி, “எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை, நாத்திகன் என்று கூட சொல்லலாம். அதற்கு தனிப்பட்ட காரணங்கள் எதுவும் இல்லை. நான் வளர்ந்ததே அப்படித்தான். கோவில், சர்ச், மசூதி என குறிப்பிட்ட இடத்திற்கு சென்று கடவுளை வணங்குகிறோம். ஆனால் கடவுள் எங்கும் இருப்பார் என்றும் கூறுகிறார்கள். இந்த இரண்டு கருத்துக்களுக்குமே நேர்மாறாக இருப்பதாக எனது அறிவுக்கு தோன்றுகிறது”. 

இதையும் படிங்க: புடவையில் அம்மாவையே ஓரங்கட்டிய குஷ்பு மகள்... ஓவர் ஸ்லிம் லுக்கில் தாறுமாறு வைரலாகும் போட்டோ...!

”கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. அப்படி என்னால் சொல்லவும் முடியாது. அந்த அளவுக்கு நான் முட்டாளும் இல்லை. இங்கு அனைத்தையும் இயக்குவது ஒரு சக்தி என்றால், எனக்கு அது பற்றி தெரியாது. என் மூளைக்கு அது எட்டவில்லை என்றே கூறுவேன்” என எவ்வித ஒளிவு மறைவுமின்றி நேரடியாக பதிலளித்துள்ளார்.