’டைரக்டர் எப்பப்பாத்தாலும் குடிபோதையிலயே ஷூட்டிங் வர்றாரு’ என்று நடிகை நமீதா தயாரிப்பாளரிடம் புகார் செய்ததைத்தொடர்ந்து அவர் படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

சரத்குமார் நடித்த ’சத்ரபதி’ படத்தை இயக்கியவர் ஸ்ரீ மகேஷ். ஓரளவுக்கு சுமாராக ஓடிய அந்தப் படம் வெளிவந்த பிறகு இன்றுவரை சொல்லிக்கொள்ளும்படியான வாய்ப்புகள் அமையவில்லை. அதனால்,மன உளைச்சலுக்கு ஆளான மகேஷ் பகல் நேரத்தில் குடிக்க ஆரம்பித்து,எப்போதும் ஃபுல் மப்பில் இருப்பது வழக்கமாம். அதனாலேயே தன்னைத்தேடி வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகளையும் இழந்து சும்மாவே இருந்திருக்கிறார் மகேஷ்.

இந்நிலையில், திருமணத்திற்கு பிறகு நமிதா நடிக்கும் ‘அகம்பாவம்’படத்திற்கு இவரை இயக்குனராக ஒப்பந்தம் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் வாராகி. இவர்,ஏற்கனவே‘சிவா மனசுல புஷ்பா ‘ படத்தைத் தயாரித்தவர்.பெண் நிருபருக்கும் , ஜாதியை வைத்து அரசியல் பண்ணும் ஒரு மோசமான அரசியல்வாதிக்கும் இடையே நடக்கும் யுத்தம்தான் இந்தப் படத்தின் கதை.

கடந்த இருப்பது நாட்களாக சென்னையில் பல்வேறு பகுதியில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் இயக்குனர் ஸ்ரீமகேஷை தூக்கிவிட்டு தயாரிப்பாளர் வாராகியே ‘ஸ்டார்ட்-கட் ‘ சொல்ல ஆரம்பித்திருக்கிறார். காரணம் என்னவென்று விசாரித்தால், வாராகியும்,மகேஷும் நீண்டநாள் நண்பர்களாம்.நண்பனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று நினைத்த வாராகி,படம் முடியும் வரை குடிக்கக் கூடாது என்ற கண்டிஷனோடுதான் இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார்.
 
துவக்கத்தில் ஒரு சில தினங்கள் குடிக்காமல்   ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார்.அப்பறம் நைட் ஷூட்டிங் நடந்தபோது லைட்டாக ஆரம்பித்து ,பகல் நேரத்திலும் சரக்கு போட்டிருக்கிறார். இது குறித்து பட நாயகி நமீதா தயாரிப்பாளருக்கு புகார் கொடுக்க,  அவர் இல்லாமலே மீதமுள்ள காட்சிகளை படமாக்க அவுட்டோர் கிளம்பிவிட்டது ‘அகம்பாவம்’ யூனிட்.

ஹிட் கொடுத்த பல இயக்குநர்களே பட வாய்ப்புகள் இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும்போது வந்த வாய்ப்பை இப்படி குடிபோதைக்காக பறிகொடுத்து நிற்கும் மகேஷை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது.