Asianet News TamilAsianet News Tamil

இயக்குனர் சிராஜ் மாரடைப்பால் மரணம்...

director siraj death
director siraj death
Author
First Published Jul 25, 2017, 1:48 PM IST


கோலிவுட்டில் என்ன பெத்த ராசா, ஊரெல்லாம் உன்பாட்டு, என் ராஜாங்கம் போன்ற வெற்றிப்படங்களை படங்களை கொடுத்தவர் இயக்குனர்  சிராஜ். 

65 வயதாகும் இவருக்கு ஆயிஷா என்கிற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். தன்னுடைய மனைவியுடன் தனியாக வசித்து வந்த இவருக்கு திடீர் என நெஞ்சுவலி ஏற்பட்டதன் காரணமாக இவரை சேத்துபட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் மருத்துவனையிலேயே உயிரிழந்தார். இவரது  உடல் அடக்கம் இன்று  மாலை சென்னையில் நடைபெற உள்ளது. இயக்குனர் சிராஜிக்கு திரையுலகத்தை சேர்ந்த பலர் நேரின் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios