கடந்த 1996ம் ஆண்டு மே மாதம் வெளியான திரைப்படம் தான் இந்தியன், உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில், சங்கர் இயக்கத்தில் மெகா ஹிட் ஆன ஒரு திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுமார் 27 ஆண்டுகள் கழித்து தற்பொழுது அந்த படத்தின் இரண்டாம் பாகம் மீண்டும் உருவாக்கப்பட்டு வருகிறது. 

ஏற்கனவே இந்த படத்திற்கான தனது படபிடிப்பு பணிகளை உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் முடித்துள்ளார். ஏறத்தாழ படப்பிடிப்பு பணிகள் முற்றிலுமாக முடிவடைந்த நிலையில், தற்பொழுது இந்த படத்திற்கு VFX அமைக்கும் பணிகளில் இயக்குனர் சங்கர் ஈடுபட்டு வருகிறார். 

தமிழ் சினிமாவில் நடிகராக களமிறங்கும் தோனி... முதல் படத்திலேயே ரோலெக்ஸ் சூர்யா போல் செம்ம மாஸ் எண்ட்ரியாமே!

இதற்காக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஒரு VFX அமைக்கும் ஸ்டுடியோவில் அவர் எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் உலக நாயகன் கமல்ஹாசன் மற்றும் இந்த படத்தில் நடித்த முக்கிய கதாபாத்திரமான நெடுமுடி வேணு உள்ளிட்டவர்களின் காட்சிகளை கொண்டு, குறிப்பாக De-Aging எனப்படும் ஒருவனுடைய வயதை குறைத்து காட்டும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி காட்சிகள் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Scroll to load tweet…

விரைவில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர், காளிதாஸ் ஜெயராம், மறைந்த நடிகர் விவேக், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, மூத்த நடிகர் டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் நிச்சயம் நடிகர் விவேகின் காட்சிகள் இடம்பெறும் என்று படக்குழு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது. விவேக் அவர்களின் பல ஆண்டுகால திரைவாழ்க்கையில் அவர் கமலுடன் இணைந்து நடித்த முதல் மற்றும் கடைசி படம் இந்தியன் 2 என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்தியன் 2 பட வேலைகளை பார்த்து வரும் அதே நேரத்தில், ராம் சரண் நடிப்பில் உருவாகி வரும் Game Changer படத்தின் வேலைகளையும் இணைத்து பார்த்து வருகின்றார் சங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

தோற்று போய் நிற்கும் ஜனனி.! ஜீவானந்தத்தை ஜெயிக்க குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்? வெளியான ப்ரோமோ!